ஆஹா… பொரி வைத்து உப்புமாவா… கேட்கவே வித்தியாசமா இருக்கே!!!

Author: Hemalatha Ramkumar
27 October 2021, 10:59 am
Quick Share

பொதுவாக நாம் ரவா உப்புமா, சேமியா உப்புமா, ராகி உப்புமா செய்து சாப்பிட்டு இருப்போம். ஆனால் பொரி உப்புமா செய்து சாப்பிட்டு உள்ளீர்களா… வித்தியாசமாக உள்ளது அல்லவா… ஆம்… இதனை மிகவும் சுலபமாக செய்து பத்தே நிமிடத்தில் செய்து விடலாம். அட்டகாசமான ருசியில் இருக்கும். இப்போது இந்த பொரி உப்புமா எப்படி செய்வது என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:
பொரி
வெங்காயம்-2
பச்சை மிளகாய்- 1
இஞ்சி- ஒரு சிறிய துண்டு
கடுகு- 1/4 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு- 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை- ஒரு கொத்து
கொத்தமல்லி தழை- சிறிதளவு
வறுத்த வேர்க்கடலை
பச்சை பட்டாணி- 1/4 கப்
கேரட்-1
எலுமிச்சம் பழம்-1/2 மூடி
மஞ்சள் தூள்- 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள்- ஒரு தேக்கரண்டி
எண்ணெய்
உப்பு

செய்முறை:
*பொரி உப்புமா செய்வதற்கு முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றவும்.

*எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகு, உளுத்தம்பருப்பு சேர்க்கவும்.

*கடுகு பொரிந்தவுடன் அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

*வெங்காயம் வதங்கியதும் பொடியாக நறுக்கிய கேரட், பச்சை பட்டாணி சேர்க்கவும்.

*பின்னர் மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து கிளறவும்.

*மிளகாய் தூள் பச்சை வாசனை போனதும் அதில் வறுத்த வேர்க்கடலை சேர்க்கலாம்.

*இப்போது பொரியை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கொள்ளவும்.

*சிறிதளவு தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவும்.

*தண்ணீர் வற்றி காய்கறிகள் வெந்ததும் கடைசியில் எலுமிச்சை சாறு மற்றும் கொத்தமல்லி தழை சேர்த்து அடுப்பை அணைத்து விடலாம்.

*அவ்வளவு தான்… அட்டகாசமான பொரி உப்புமா தயார்.

Views: - 236

0

0