ரவா உருண்டையை இப்படி செய்து பாருங்கள், இன்னும் சுவையாக இருக்கும்!! 

Author: Hemalatha Ramkumar
12 May 2023, 7:37 pm
Quick Share

Images are © copyright to the authorized owners.

Quick Share

பொதுவாக இனிப்பு என்றாலே நம் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். ஒரு காலத்தில் கூட்டு குடும்பமாக இருந்து வீட்டிலேயே பலகாரங்கள் அனைத்தையும் செய்வது வழக்கமாக இருந்தது. ஆனால், இப்பொழுது எல்லாம் நாம் கடைகளில் தான் இனிப்பு வாங்கி சாப்பிடுகிறோம். லட்டு, ஜாங்கிரி, அதிரசம் போன்ற இனிப்புகளுடன் இப்பொழுது பல புது புது வகைகளும் வந்து விட்டன. ஆனால், இப்பொழுதும் கூட நம்மால் எளிதில் வீட்டிலேயே இனிப்புகள் செய்ய முடியும். அப்படிப்பட்ட ஒரு இனிப்பு வகையைத் தான் நாம் இப்பொழுது பார்க்கப் போகிறோம். வீட்டில் உள்ள ரவையை வைத்து வீட்டிலேயே எளிதில் ரவா லட்டு செய்யலாம். அது குறித்து விளக்கமகப் பார்ப்போம் வாருங்கள்.

தேவையான பொருட்கள்:

ரவை – 1/2 கப் 

நெய் – 3 ஸ்பூன் 

தேங்காய் – துருவியது 1 கப் 

சர்க்கரை –

தண்ணீர் – தேவைக்கேற்ப 

ஏலக்காய் தூள் – 1/2 டீஸ்பூன்  

பாதாம் பருப்பு – விருப்பத்திற்கு ஏற்ப 

முந்திரி பருப்பு – விருப்பத்திற்கு ஏற்ப

செய்முறை:

  • முதலில் தேங்காயை துருவி அதனை வாணலில் போட்டு வறுத்து வைத்துக் கொள்ள வேண்டும். 
  • அடுத்து, அதனை ஒரு தட்டுக்கு மாற்றி 3 ஸ்பூன் நெய் ஊற்றிக் கொள்ளுங்கள்.
  • அதில் பாதாம் மற்றும் முந்திரி பருப்போ போட வேண்டும். அதனை வறுத்து அதனுடன் ஒரு கப் ரவை சேர்த்து வறுக்க வேண்டும்.
  • பின்னர், நாம் முன்பே வறுத்து வைத்துள்ள தேங்காய் துருவலையும் சேர்த்து நன்றாக கிண்ட வேண்டும்.
  • அதில் ஏலக்காய் தூள் சேர்த்துக் கொள்ளவும். 2 நிமிடங்களுக்கு கிண்டி விட்டு இறக்கி விடலாம். 
  • அடுத்து ஒரு பாத்திரத்தில் 1/2 தண்ணீர் 1/2 சர்க்கரை சேர்க்க வேண்டும். கம்பி பதம் வந்த பின்னர், ரவை கலவையை சேர்த்து கிண்டி விடவும். பின்னர், அடுப்பை ஆஃப் செய்து விடவும்.
  • சூடாக இருக்கும் போதே உருண்டைகளாக பிடித்து அனைவருக்கும் பரிமாறி மகிழலாம்.

Views: - 68

0

0