ரெஸ்டாரண்ட் ஸ்டைல் ஸ்வீட் மற்றும் ஸ்பைசி முட்டை ரெசிபி!!!

Author: Hemalatha Ramkumar
27 November 2021, 11:36 am
Quick Share

முட்டையை வைத்து பல விதமான உணவு வகைகளை செய்யலாம் என்பதை நீங்கள் ஏற்கனவே அறிவீர்கள். முட்டையை வைத்து செய்யப்படும் ஒவ்வொரு உணவும் வித்தியாசமான ருசியில் இருக்கும். அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருப்பது ஸ்வீட் மற்றும் ஸ்பைசி முட்டை ரெசிபி.

தேவையான பொருட்கள்:
வேக வைத்த முட்டை- 4
வெங்காய தாள்- ஒரு கொத்துபச்சை குடை மிளகாய்- 1/2
நறுக்கிய பூண்டு- 2 தேக்கரண்டி
நறுக்கிய இஞ்சி- 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய்- 4
சோயா சாஸ்- 1 தேக்கரண்டி
ரெட் சில்லி சாஸ்- 1 தேக்கரண்டி
தக்காளி கெட்சப்- 2 தேக்கரண்டி
சோள மாவு- 2 தேக்கரண்டி
தேன்- 2 தேக்கரண்டி
எண்ணெய்- 1தேக்கரண்டி
உப்பு-
தேவையான அளவு

செய்முறை:
*ஸ்வீட் மற்றும் ஸ்பைசி முட்டை செய்வதற்கு முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றவும்.

*எண்ணெய் காய்ந்ததும் நறுக்கிய வெங்காயத் தாள், இஞ்சி, பூண்டு, குடை மிளகாய் மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும்.

*இப்போது வெங்காயத் தாளின் இலையை சேர்த்து ஐந்து நிமிடங்கள் வதக்கி கொள்ளவும்.

*பின்னர் அனைத்து சாஸ் வகைகளையும் கொடுக்கப்பட்டுள்ள அளவில் சேர்த்து கிளறவும்.

*வேக வைத்த முட்டையை சோள மாவில் பிரட்டி எடுத்து அதனையும் சேர்த்து கிளறவும்.

*கடைசியில் இரண்டு தேக்கரண்டி தேன் சேர்த்து சூடாக பரிமாறவும்.

Views: - 159

0

0