ரவா லட்டு சாஃப்டா வரவே மாட்டேங்குதா… உங்களுக்கான இரகசிய டிப்ஸ்!!!

Author: Hemalatha Ramkumar
9 October 2022, 7:42 pm
Quick Share

என்ன தான் இருந்தாலும் கடையில் வாங்கும் ரவா லட்டு போல இல்லையே என்று வருத்தப்படுபவர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால், இந்த பதிவு உங்களுக்கு மிகவும் ஹெல்ப்ஃபுல்லாக இருக்கும். சாஃப்டான ரவா லட்டு செய்வதற்தான சில இரகசிய டிப்ஸ் பற்றி பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்: நெய் – 6 தேக்கரண்டி பாதாம் பருப்பு- 5
முந்திரி பருப்பு- 5
பூசணி விதை
பிஸ்தா பருப்பு – ஒரு கப் உலர் திராட்சை – 1/2 கைப்பிடி
தேங்காய் துருவல் – 1/2 கப் ரவை – 2 கப்
சர்க்கரை – 1 1/2 கப் ஏலக்காய் – 10
சூடான பால் – 1/2 கப்

செய்முறை:
*ரவா லட்டு செய்ய ஒரு கடாயை அடுப்பில் வைத்து இரண்டு தேக்கரண்டி நெய் ஊற்றவும்.

*இதில் நட்ஸ் வகைகள் அனைத்தையும் ஒன்றிரண்டாக உடைத்து போட்டு வறுத்து எடுக்கவும்.

*பின்னர் உலர்ந்த திராட்சை உப்பி வரும் அளவிற்கு வறுத்து எடுத்து கொள்ளவும்.

*இதே கடாயில் தேங்காய் துருவல் சேர்த்து மொறு மொறுப்பாக வறுத்து எடுத்து கொள்ளவும்.

*மேலும் இரண்டு தேக்கரண்டி நெய் ஊற்றி ரவையை வாசனை வரும் வரை வறுத்து கொள்ளுங்கள்.

*இப்போது ஒரு மிக்ஸி ஜாரில் சர்க்கரை மற்றும் ஏலக்காய் சேர்த்து அரைத்து ஒரு பவுலில் சேர்க்கவும்.

*இதனோடு வறுத்த ரவை மற்றும் நட்ஸ் சேர்த்து கிளறவும்.

*இப்போது 1/2 கப் சூடான பால் சேர்த்து கிளறி மூடி போட்டு வைக்கவும்.

*இரண்டு நிமிடங்கள் கழித்து ரவையை உருண்டைகளாக பிடிக்கவும்.

*அவ்வளவு தான்… சுவையான மற்றும் சாஃப்டான ரவை லட்டு தயார்.

*இது பால் கொண்டு செய்தது என்பதால் வெளியில் வைத்து மூன்று நாட்களும், ஃபிரிட்ஜில் வைத்து ஒரு வாரம் வரையும் பயன்படுத்தலாம்.

Views: - 455

0

0