இந்த மாதிரி ஒரு முறை சாம்பார் பொடி அரைச்சு பாருங்க… சாம்பார் சும்மா கம கமன்னு இருக்கும்!!!
Author: Hemalatha Ramkumar1 June 2023, 7:50 pm
நாம் அனைவரும் ஒரே மாதிரியான பொருட்கள் பயன்படுத்தி சாம்பார் செய்தாலும் ஒவ்வொருவர் செய்யும் சாம்பாரும் ஒவ்வொரு விதமாக இருக்கும். இதற்கு முக்கிய காரணமாக இருப்பது நாம் பயன்படுத்தும் சாம்பார் பொடி தான். சாம்பார் பொடி அரைக்க பயன்படுத்தும் பொருட்களை சரியான அளவுகளில் எடுப்பது மிகவும் அவசியம். எனவே சாம்பார் செய்ய முக்கிய பொருளாக இருக்கும் சாம்பார் பொடியை எப்படி செய்வது என்பதை இப்போது பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
வர மல்லி – 1/2 கப்
வர மிளகாய்- 17
மிளகு- ஒரு தேக்கரண்டி
சீரகம்- 1 1/2 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு- 1 1/2 தேக்கரண்டி
கடுகு- 1 1/2 தேக்கரண்டி
வெந்தயம்- 1 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள்- 1/2 தேக்கரண்டி
பெருங்காயத் தூள்- 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை- இரண்டு கொத்து
செய்முறை:
*ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் வர மல்லி விதைகள், வர மிளகாய், மிளகு, சீரகம், உளுத்தம்பருப்பு, கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை போன்ற பொருட்களை சேர்த்து தனித்தனியாக டிரை ரோஸ்ட் செய்யவும். எண்ணெய் பயன்படுத்தாமல் வறுக்க வேண்டும்.
*அடுப்பை அணைத்து விட்டு, கடாய் சூடாக இருக்கும் போதே மஞ்சள் தூள் மற்றும் பெருங்காயத் தூளை வறுத்து எடுத்து கொள்ளவும்.
*வறுத்து வைத்த பொருட்கள் அனைத்தும் ஆறியதும் மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து எடுத்தால் கம கம சாம்பார் பொடி தயார்.
0
0