அனைவரும் விரும்பி சாப்பிடும் கரண்டி ஆம்லெட் செய்வது எப்படி???

13 January 2021, 6:14 pm
Quick Share

அசைவம் சாப்பிடும் அனைவருக்கும் பெரும்பாலும் முட்டை என்றால் மிகவும் பிடிக்கும். முட்டையை வைத்து பல விதமான ரெசிபிகள் செய்யலாம். அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருப்பது அனைருக்கும் மிகவும் பிடித்தமான கரண்டி ஆம்லெட். அதனை எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க…

தேவையான பொருட்கள்:

முட்டை- 2

சின்ன வெங்காயம்- 5

பச்சை மிளகாய்- 2

கொத்தமல்லி தழை- சிறிதளவு

மஞ்சள் தூள்- ஒரு சிட்டிகை

மிளகாய் தூள்- 1/2 தேக்கரண்டி

மிளகுத்தூள்- 1/2 தேக்கரண்டி

உப்பு- தேவையான அளவு

செய்முறை:

*கரண்டி ஆம்லெட் செய்வதற்கு முதலில் முட்டையை தயார் செய்து வைத்து கொள்ளலாம். 

*அதற்கு ஒரு பாத்திரத்தில் இரண்டு முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கலந்து கொள்ளவும். 

*இதனோடு ஐந்து நறுக்கிய சின்ன வெங்காயம், இரண்டு பச்சை மிளகாய் சேர்த்து கிளறவும். 

*அடுத்து  ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், 1/2 தேக்கரண்டி மிளகாய் தூள், 1/2 தேக்கரண்டி மிளகுத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கவும். 

*இப்போது ஒரு தாளிப்பு கரண்டியை எடுத்து அடுப்பில் வைக்கவும். இதில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். 

*பிறகு நாம் கலந்து வைத்த முட்டை கலவையை ஊற்றவும்.

*ஓரங்களை ஒரு ஸ்பூன் வைத்து உள்ளே தள்ளி விட வேண்டும். ஒரு பக்கம் வெந்ததும் இரண்டு ஸ்பூன் வைத்து மெதுவாக திருப்பி போடவும். 

*இரண்டு பக்கத்திலும் பொன்னிறமாக மாறியதும் ஆம்லெட்டை எடுத்து வெளியே வைத்து விடலாம். இப்போது சுவையான கரண்டி ஆம்லெட் தயார். 

*இதனை நீங்கள் விருப்பப்பட்டால் குழிப் பனியார கல்லிலும் செய்யலாம்.