சூப்பரான செஸ்வான் சாஸ் வீட்டில் செய்வது எப்படி???

21 January 2021, 9:21 pm
Quick Share

தற்போது உள்ள தலைமுறை அடிக்கடி ஹோட்டல் சென்று சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால் ஹோட்டல் உணவுகளை ஆரோக்கியமான முறையில் வீட்டிலே செய்து சாப்பிடலாம். அவ்வாறு ஹோட்டல்களில் அடிக்கடி ஆர்டர் செய்து சாப்பிடப்படும் ஒரு உணவு செஸ்வான் ஃபிரைட் ரைஸ். இதில் சேர்க்கப்படும் சாஸ்  முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த பதிவில் செஸ்வான் சாஸ் எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க…

தேவையான பொருட்கள்:

எண்ணெய்- ஒரு தேக்கரண்டி

பூண்டு- ஒரு தேக்கரண்டி

இஞ்சி- 1/2 தேக்கரண்டி

காய்ந்த மிளகாய் விழுது- 2 தேக்கரண்டி

மிளகுத்தூள்- 1/4 தேக்கரண்டி

சோயா சாஸ்- ஒரு தேக்கரண்டி

சில்லி சாஸ்- 2 தேக்கரண்டி

சர்க்கரை- ஒரு தேக்கரண்டி

வினிகர்- ஒரு தேக்கரண்டி

உப்பு- தேவையான அளவு

செய்முறை:

*ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றவும். 

*எண்ணெய் காய்ந்ததும் அதில் இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும். 

*பூண்டு பொன்னிறமாக வதங்கியதும் காய்ந்த மிளகாய் விழுது சேர்க்கவும். 

*அடுத்து தேவையான அளவு உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து வதக்குங்கள். 

*இப்போது சிறிதளவு தண்ணீர் ஊற்றி இரண்டு நிமிடங்கள் மட்டும் கொதிக்க விடவும்.

*கொதித்த பின் அடுப்பை சிம்மில் வைத்து சோயா சாஸ், சில்லி சாஸ் சேர்த்து ஐந்து நிமிடங்கள் கிளறவும். 

*அடுத்து சர்க்கரை சேர்த்து கலக்கவும். 

*கடைசியில் வினிகர் சேர்த்து இரண்டு நிமிடங்கள் கொதித்த பின் அடுப்பை அணைத்து விடலாம். இப்போது சூப்பரான செஸ்வான் சாஸ் தயார்.

Views: - 0

0

0