இனி வீட்டிலே செய்யலாம் டேஸ்டான மொறு மொறு காரா பூந்தி!!!

Author: Hemalatha Ramkumar
25 November 2021, 1:17 pm
Quick Share

பொதுவாக நாம் மிக்சர், காரா சேவ், காரா பூந்தி போன்ற தின்பண்டங்களை கடைகளில் இருந்து வாங்கி தான் சாப்பிடுவோம். ஆனால் இனியும் அப்படி செய்ய தேவையில்லை. நாமே ஆரோக்கியமான முறையில் செய்து ஜாலியாக சாப்பிடலாம். இன்று காரா பூந்தி வீட்டிலே எளிமையான முறையில் எப்படி செய்வது என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:
கடலை மாவு- 1/2 கப்
பச்சரிசி மாவு- இரண்டு தேக்கரண்டி
மிளகாய் தூள்- 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள்- 1/4 தேக்கரண்டி
சமையல் சோடா- ஒரு சிட்டிகை
உப்பு- தேவையான அளவு
எண்ணெய்- தேவையான அளவு

செய்முறை:
*காரா பூந்தி செய்வதற்கு முதலில் ஒரு அகலமான பாத்திரத்தில் கடலை மாவு, பச்சரிசி மாவு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், சமையல் சோடா, உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்கவும்.

  • இதில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி மீண்டும் கலந்து கொள்ளவும்.

*மாவு இட்லி மாவு பதத்திற்கு இருக்க வேண்டும்.

*இப்போது ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றவும்.

*எண்ணெய் காய்ந்ததும் ஒரு சல்லி கரண்டி எடுத்து அதன் மீது மாவை ஊற்றவும்.

*மாவை ஊற்றி விட்டு அதனை தோசை சுடுவது போல் கரண்டியால் பரப்பி விடவும்.

*இப்போது காரா பூந்தி மணி மணியாக அழகாக விழும்.

*இது நன்கு பொரிந்தவுடன் ஒரு டிஷ்யூ பேப்பர் மீது வைத்து அதிகப்படியான எண்ணெயை அகற்றவும்.

*வறுத்த கறிவேப்பிலை, பூண்டு மற்றும் வேர்க்கடலை சேர்த்து காரா பூந்தியை இப்போது சாப்பிடலாம்.

Views: - 86

0

0

Leave a Reply