ஜில்லு ஜில்லுன்னு ஆரோக்கியமான நுங்கு பாயாசம்!!!

Author: Hemalatha Ramkumar
25 May 2022, 1:09 pm
Quick Share

உடல் சூட்டை தணிப்பதற்கு இயற்கையாக கிடைக்கும் சில உணவுப் பொருட்களை வைத்து வீட்டிலேயே ருசியான உணவுகளை சமைத்து சாப்பிட முடியும். அவ்வாறு நுங்கை வைத்து செய்யக்கூடிய இந்த பாயாசத்தை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

நுங்கு – 7

பால் – 1/2 லிட்டர்

ஏலக்காய் – 2

சர்க்கரை – 75 (கிராம்)

குங்குமப்பூ – 2 சிட்டிகை

செய்முறை:

* நுங்கின் மேல் தோலை நீக்கி சிறுசிறு துண்டுகளாக வெட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும்.

* தோலுரித்து ஊற வைத்த பாதாம், ஏலக்காய் மற்றும் சிறிது பால் சேர்த்து மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

*பாலை அடுப்பில் வைத்து, அதில் சர்க்கரை மற்றும் பாதாம் கலவையை கலந்து சற்று கெட்டியாகும் காய்ச்சி, ஆற வைக்கவும்.

* பிறகு இவற்றுடன் எடுத்து வைத்துள்ள நுங்கைச் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின்னர் இவை ஆறியதும் இதனை ஃப்ரிட்ஜில் வைத்து ஜில்லென்று ஆனதும் அனைவருக்கும் பரிமாறவும். இது மிகவும் சுவையாக இருக்கும். வயிற்றுக்கும் குளிர்ச்சியாக இருக்கும் உடல் சூடும் தணியும்.

Views: - 558

0

0