குஸ்கா ரெசிபி: அப்படியே பிரியாணி மாதிரியே இருக்கும்…யாராலும் கண்டுபிடிக்க முடியாது!!!

Author: Hemalatha Ramkumar
27 April 2022, 4:26 pm
Quick Share

பிரியாணி போன்ற சுவையான குஸ்காவை‌ எப்படி செய்வது என்று பார்ப்போம். அசைவம் சாப்பிட வேண்டும் என்று நினைப்பவர்கள் கூட இந்த குஸ்கா செய்து சாப்பிடலாம் மிக அருமையாக இருக்கும். கமகம மணத்துடன் குஸ்கா எப்படி செய்வது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி – 2 கப்
வெங்காயம் – 3
தக்காளி – 2
பச்சைமிளகாய் – 2
இஞ்சி பூண்டு விழுது – 2 டேபிள்ஸ்பூன்
புதினா – சிறிதளவு
கொத்தமல்லி – சிறிதளவு
பட்டை – 1
ஏலக்காய் – 2
கிராம்பு – 3
பிரியாணி இலை – 1
நட்சத்திர பூ – 1
சோம்பு – 1டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1ஸ்பூன்
மஞ்சள்தூள் – 1/4 ஸ்பூன்
மல்லித்தூள் – 1/2 ஸ்பூன்
கரம் மசாலா – 1ஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
நெய் – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:
*முதலில் குக்கரில் நெய் சேர்த்து அதனுடன் எண்ணெய் சேர்க்க வேண்டும்.

*பிறகு பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, சோம்பு, நட்சத்திர பூ , ஏலக்காய் மற்றும் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். பின் தக்காளி, பச்சைமிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

*பின்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், கரம் மசாலா , உப்பு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

*இவை நன்கு குழைந்த பிறகு புதினா, கொத்தமல்லி தழை சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு, 3/4 மணி நேரம் ஊற வைத்த பாசுமதி அரிசியை சேர்த்து நன்றாக கிளறி தண்ணீர் சேர்த்து உப்பு தேவையான அளவு சேர்த்து நன்கு கிளறி குக்கரை மூடி 2 விசில் வரை விட்டு இறக்கி விட வேண்டும்.

*இப்போது சூடான, சுவையான கமகமக்கும் குஸ்கா தயார்.

*இந்த குஸ்காவுடன் வெங்காய பச்சடி அல்லது உருளைக்கிழங்கு வறுவல் வைத்து சாப்பிட அருமையாக இருக்கும்.

Views: - 883

0

0