ரசித்து ருசித்து சாப்பிட தேங்காய் சாதம் ரெசிபி!!!

Author: Hemalatha Ramkumar
12 May 2022, 2:01 pm
Quick Share

தேங்காய் சாதத்தை டிபன் பாக்ஸில் லஞ்ச்‌ ரெசிபியாக செய்து கொடுப்பது உண்டு. குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு ரெசிபி. அதுமட்டுமல்லாமல் தேங்காய் சாதத்தை பலர் பலவாறு சமைப்பார்கள். தேங்காய் சாதம் அருமையான கலவை சாதம் எளிமையான முறையில் எப்படி செய்வது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
அரிசி – 1 கப்
தண்ணீர் – 2 கப்
தேங்காய் – 1/2 கப்(துருவியது)
கடுகு – 1/2 ஸ்பூன்
உளுத்தம்பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்
கடலைப்பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
வரமிளகாய் – 2
கறிவேப்பிலை – ஒரு கொத்து
பெருங்காயத்தூள் – 1/2 டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை:
* முதலில் அரிசியை நன்கு கழுவி அரைமணி நேரம் ஊற வைக்கவும்.

*பிறகு குக்கரை அடுப்பில் வைத்து ஊற வைத்துள்ள அரிசி மற்றும் 2 கப் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி மூன்று விசில் விட்டு இறக்கி. சாதத்தை ஒரு தட்டில் போட்டு உலர வைக்க வேண்டும்.

*அடுத்ததாக அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, சீரகம், வரமிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு 4 நிமிடம் வதக்கி விட வேண்டும்.

* துருவி வைத்துள்ள தேங்காய் மற்றும் உப்பு சேர்த்து, நன்கு பொன்னிறமாக வதக்கி விட வேண்டும்.

* கலவையானது ஓரளவு பொன்னிறமாக மாறும் போது, சாதத்தை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு நன்கு கிளறி விட்டு இறக்க வேண்டும்.

* இப்போது சூப்பரான, சுவையான மற்றும் ஈஸியான தேங்காய் சாதம் தயார்.

*இந்த சுவையான தேங்காய் சாதத்துடன் வறுவல், ஊறுகாய், கொத்தமல்லி புதினா துவையல் சைடிஸ்ஸாக வைத்து சாப்பிட அருமையாக இருக்கும்.

Views: - 568

0

0