அசர வைக்கும் டேஸ்டில் எளிமையாக செய்யலாம் முட்டை கபாப்…!!!

Author: Hemalatha Ramkumar
4 October 2021, 11:02 am
Quick Share

முட்டையை வைத்து ஏராளமான உணவு வகைகளை செய்யலாம். அவை ஒவ்வொன்றும் தனித்துவமான சுவையை கொண்டவை. இதன் சிறப்பு என்னவென்றால் இவற்றை நாம் சுலபமாக செய்து விடலாம். இன்று நாம் பார்க்க இருப்பது முட்டை கபாப் ரெசிபி.

தேவையான பொருட்கள்:
வேக வைத்த முட்டை- 4
இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயம் விழுது- ஒரு தேக்கரண்டி
மிளகாய் தூள்- 1/2 தேக்கரண்டி
மல்லித் தூள்- 1/2 தேக்கரண்டி
கரம் மசாலா- 1/2 தேக்கரண்டி
சாட் மசாலா- 1/2 தேக்கரண்டி
சீரகத் தூள்- 1/4 தேக்கரண்டி
மஞ்சள் தூள்- 1/4 தேக்கரண்டி
உப்பு- 1/4 தேக்கரண்டி
சோள மாவு- ஒரு தேக்கரண்டி
வெண்ணெய்- ஒரு தேக்கரண்டி
கொத்தமல்லி தழை- சிறிதளவு
எண்ணெய்- தேவையான அளவு

மசாலா செய்ய:-
நறுக்கிய வெங்காயம்- 1
தக்காளி விழுது-1
இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயம் விழுது- ஒரு தேக்கரண்டி
மிளகாய் தூள்- 1/2 தேக்கரண்டி
சாட் மசாலா- 1/2 தேக்கரண்டி
உப்பு- 1/4 தேக்கரண்டி
வெண்ணெய்- 2 தேக்கரண்டி
கொத்தமல்லி தழை- சிறிதளவு

செய்முறை:
*ஒரு அகலமான பாத்திரத்தில் வேக வைத்த முட்டையை துருவிக் கொள்ளவும்.

*இதனோடு இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், வெங்காய விழுது, மிளகாய் தூள், கரம் மசாலா, மல்லித்தூள், சாட் மசாலா, மஞ்சள் தூள் மற்றும் நறுக்கிய கொத்தமல்லி தழை சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

*இப்போது இந்த கலவையில் சோள மாவு சேர்த்து உருண்டையாக பிடிக்கவும்.

*அடுத்து தோசைக்கல்லில் வெண்ணெய் சேர்த்து அதில் உருண்டைகளை போட்டு பொரித்து எடுக்கவும்.

*இதே தோசைக்கல்லில் நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் வெங்காயம் விழுது சேர்த்து வதக்கவும்.

*இப்போது தக்காளி விழுது சேர்த்து கிளறவும்.

*இதனோடு சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடுங்கள்.

*ஒரு கொதி வந்தவுடன் மிளகாய் தூள், சாட் மசாலா, உப்பு சேர்த்து பத்து நிமிடங்கள் கொதிக்க விடலாம்.

*கடைசியில் நறுக்கிய கொத்தமல்லி தழை தூவவும்.

*இந்த சமயத்தில் நாம் தயார் செய்து வைத்த முட்டை கபாபை சேர்த்து விடலாம்.

*அவ்வளவு தான்… ருசியான முட்டை கபாப் தயார்.

Views: - 343

0

0