இந்த தீபாவளிக்கு உங்கள் வீட்டிலே செய்யலாம் காஜூ கட்லி!!!

Author: Hemalatha Ramkumar
23 October 2022, 7:31 pm
Quick Share

தீபாவளி என்றாலே புத்தாடைகள், இனிப்பு வகைகள் மற்றும் பட்டாசுகள் தான். அந்த வகையில் கடைகளில் ஏராளமான இனிப்பு வகைகள் விற்பனை செய்யப்படும். பண்டிகை காலம் என்றாலே விலை எக்கச்சக்கமாக இருக்கும். எனவே முடிந்த அளவு வீட்டிலே பலகாரங்களை செய்வது சிறந்தது. இன்று நாம் பார்க்க இருப்பது அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு காஸ்ட்லி ஸ்வீட்டான காஜூ கட்லி.

தேவையான பொருட்கள்: முந்திரி – 2 கப்
சர்க்கரை – 1கப்
பால் பவுடர் -1/4 கப்
நெய் -1 தேக்கரண்டி

செய்முறை:
*முதலில் முந்திரி பருப்பை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு பல்ஸ் மூலமாக அரைத்து கொள்ளவும்.

*விட்டு விட்டு அரைக்காவிட்டால் முந்திரி பருப்பில் இருந்து எண்ணெய் வெளி வர ஆரம்பித்து விடும்.

*நைசாக அரைக்காமல் கொர கொரவென்று அரையுங்கள்.

*இப்போது ஒரு காடாயில் சர்க்கரை சேர்த்து அது கரையும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி ஒரு கம்பி பதம் வரும் வரை கொதிக்க விடவும்.

*கம்பி பதம் வந்தவுடன் முந்திரி பருப்பு பொடியை சேர்த்து கிளறவும்.

*முக்கால் பதம் வெந்ததும் பால் பவுடர் சேர்த்து கிளறுங்கள்.

*இது நன்கு வெந்ததும் பட்டர் பேப்பரில் போட்டு சப்பாத்தி மாவு திரட்டுவது போல திரட்டி அரை இன்ச் அளவிற்கு திரட்டி விருப்பமான அளவில் பீஸ் போட்டு கொள்ளலாம்.

Views: - 463

0

0