காரசாரமான இஞ்சி சட்னி ரெசிபி!!!

Author: Hemalatha Ramkumar
23 October 2021, 12:45 pm
Quick Share

இட்லி, தோசைக்கு தொட்டுக் கொள்ள பல விதமான சட்னி வகைகளை நாம் செய்வதுண்டு. அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருப்பது இஞ்சி சட்னி. இது மிகவும் ருசியாக இருப்பதோடு, இதனை எளிதாகவும் செய்து விடலாம். இப்போது இந்த இஞ்சி சட்னி எப்படி செய்வது என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:
எண்ணெய்- 2 தேக்கரண்டி
இஞ்சி- 2 பெரிய துண்டு
கடுகு- 1/4 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய்- 6
கறிவேப்பிலை- ஒரு கொத்து
வெங்காயம்- 2
தக்காளி- 2
துருவிய தேங்காய்- 3 தேக்கரண்டி
புளி- சிறிய துண்டு
உப்பு- தேவையான அளவு

தாளிக்க:
எண்ணெய்- 1 1/2 தேக்கரண்டி
கடுகு- 1/4 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு- 1 1/2 தேக்கரண்டி
பெருங்காயத் தூள்- 1 சிட்டிகை
கறிவேப்பிலை- ஒரு கொத்து

செய்முறை:
*ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்க்கவும்.

*கடுகு பொரிந்தவுடன் நறுக்கிய இஞ்சி, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

*வெங்காயம் கொஞ்சம் வதங்கியதும் தக்காளி சேர்க்கவும்.

*இப்போது மூன்று தேக்கரண்டி தேங்காய், புளி, தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கி இறக்கி வைக்கவும்.

*இது நன்கு ஆறியதும் மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து கொள்ளவும்.

*இப்போது தாளிக்க வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத் தூள், கறிவேப்பிலை சேர்க்கவும்.

*இதில் அரைத்து வைத்த சட்னியை சேர்த்து கிளறி அடுப்பை அணைத்து விடலாம்.

*அவ்வளவு தான்… சுவையான இஞ்சி சட்னி தயார்.

Views: - 281

0

0