ஆவி பறக்கும் இட்லி கூட தொட்டு சாப்பிட காரசாரமான வெங்காய சட்னி!!!

Author: Hemalatha Ramkumar
6 September 2022, 7:25 pm
Quick Share

இட்லி, தோசைக்கு பல விதமான சட்னி, சாம்பார் வகைகள் இருந்தாலும் காரசாரமான வெங்காய சட்னிக்கு ஈடு இணை இருக்கவே முடியாது. சின்ன வெங்காயம் சேர்த்து காரசாரமான வெங்காய சட்னி எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க…

தேவையான பொருட்கள்:

சின்ன வெங்காயம்- 15 தக்காளி- 2
உளுத்தம் பருப்பு- ஒரு தேக்கரண்டி
இஞ்சி- ஒரு சிறு துண்டு

பூண்டு பல்- 2
பச்சை மிளகாய்- 2
புளி- சிறு நெல்லிக்காய் அளவு
கருவேப்பிலை- இரண்டு கொத்து
கொத்தமல்லி தழை- ஒரு கைப்பிடி
உப்பு- தேவையான அளவு

தாளிக்க:
நல்லெண்ணெய்- ஒரு தேக்கரண்டி
கடுகு- 1/4 தேக்கரண்டி
சீரகம்- 1/4 தேக்கரண்டி கருவேப்பிலை- ஒரு கொத்து
வர மிளகாய்- ஒன்று

செய்முறை:
*ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றவும்.

*எண்ணெய் காய்ந்ததும் உளுத்தம்பருப்பு சேர்த்து வறுக்கவும்.

*பின்னர் வெங்காயம், சம அளவு இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும்.

*வெங்காயம் வதங்கிய பின் பச்சை மிளகாய் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து கொள்ளலாம்.

*தக்காளி நன்றாக வதங்கியதும் கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை மற்றும் புளி சேர்த்து வதக்கி அடுப்பை அணைத்து கொள்ளுங்கள்.

*இந்த கலவை நன்கு ஆறியதும் மிக்ஸி ஜாரில் சேர்த்து உப்பு போட்டு நைசாக அரைத்து எடுத்து கொள்ளலாம்.

*இந்த சட்னியை ஒரு தாளிப்பதற்கு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், கறிவேப்பிலை மற்றும் வர மிளகாய் சேர்த்து தாளித்து கொட்டவும்.

*அவ்வளவு தான்… காரசாரமான வெங்காய சட்னி தயார்.

Views: - 907

0

0