சளி, இருமல் குறைய ருசியான பூண்டு சூப் ரெசிபி!!!

Author: Hemalatha Ramkumar
5 February 2023, 2:18 pm
Quick Share

நொறுக்குத் தீனி சாப்பிட யாருக்குத்தான் பிடிக்காது? குளிர்கால நாட்களில் பலர் அடிக்கடி நொறுக்கு தீனி சாப்பிடுவதுண்டு. நொறுக்கு தீனி உடலுக்கு தீங்கு விளைவிக்கும். ஆகவே, சூப் போன்ற ஆரோக்கியமான உணவை நீங்கள் தேர்வு செய்யலாம். அந்த வகையில், நீங்கள் சூடான சாதத்துடன் பூண்டு சூப் சாப்பிடலாம். பூண்டு சூப் சாப்பிடுவதால், குளிர் காலத்தில் சளி, இருமல் போன்றவையும் குறையும்.

பூண்டு சூப் செய்வது எப்படி?
*100 கிராம் பூண்டு எடுத்து கொள்ளவும்.

*கடாயில் தோலுரித்த பூண்டு, நறுக்கிய வெங்காயம் மற்றும் உலர்ந்த உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.

*இப்போது அனைத்து பொருட்களையும் அரைத்து கொள்ளவும் அல்லது நசுக்கவும். மீண்டும் அதனுடன் நசுக்கிய பூண்டு மற்றும் காய்ந்த மிளகாயை சேர்த்து கிளறவும்.

*இப்போது ருசிக்கேற்ப உப்பு மற்றும் கடுகு எண்ணெய் சேர்த்து கிளறினால் சுவையான பூண்டு சூப் தயார்.

*கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.

Views: - 558

0

0