பருப்பு ரசம் மற்ற ரச வகைகளில் இருந்து சற்று ருசியில் மாறுபடும் . மதிய உணவில் கண்டிப்பாக ரசம் இருக்கும். எந்த வகையான குழம்பு இருந்தாலும் தயிர் சாதம் சாப்பிடுவதற்க்கு முன்பு ரசம் ஊற்றி சாப்பிடுவார்கள். ரசம் ருசியாக இருக்க வேண்டுமென்றால் அதிகம் கொதிக்க வைக்க கூடாது . பருப்பு ரசத்தை வெள்ளை சாதத்துடன் சேர்த்து ஏதேனும் ஒரு வகை வறுவல், பொரியல், அப்பளத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்.
சுவையான, கமகமக்கும் பருப்பு ரசம் எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
துவரம்பருப்பு – 3/4 கப்
புளி – எலுமிச்சை பழ அளவு
தக்காளி – 2
மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன்
ரசப்பொடி – 1 டேபிள்ஸ்பூன்
பெருங்காயத்தூள் – 1/2 டேபிள்ஸ்பூன்
வரமிளகாய் – 1
பச்சைமிளகாய் – 1
கறிவேப்பிலை – தேவையான அளவு
கொத்தமல்லி தழை – தேவையான அளவு
கடுகு , உளுத்தம்பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்
வெந்தயம் – 1/4 டீஸ்பூன்
மிளகு – 1 1/2 டேபிள்ஸ்பூன்
சீரகம் – 1 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
நெய் – 1 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
*முதலில் ஒரு குக்கரில் துவரம்பருப்பு, தக்காளி, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், தண்ணீர் சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
*அடுத்ததாக ஒரு கிண்ணத்தில் புளியை ஊற வைத்து அது நன்கு ஊறியதும் , கரைத்து அந்த புளி கரைசலை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
*அடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் மிளகு, சீரகம், பச்சைமிளகாய், பூண்டு இவை அனைத்தையும் கொரகொரப்பாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
*பிறகு வேக வைத்துள்ள துவரம்பருப்பு, தக்காளி இரண்டையும் கைகளால் நன்றாக மசித்து, புளி கரைசலுடன் சேர்த்து நன்கு கலந்து வைத்துக் கொள்ளவும்.
* பின்பு அந்த கலவையுடன் கொத்தமல்லி தழை மற்றும் கறிவேப்பிலை, மஞ்சள்தூள், ரசப்பொடி, உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
*அடுத்ததாக, அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம், வரமிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் மற்றும் அரைத்து வைத்துள்ள மிளகு, சீரகம் கலவையை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி விட வேண்டும்.
* பின்பு அந்த தாளிப்பை கரைத்து வைத்துள்ள புளி மற்றும் பருப்பு கலவையுடன் சேர்த்து அடுப்பில் வைக்கவும்.
* பிறகு அடுப்பை சிம்மில் வைத்து பருப்பு ரசம் நுரைத்து வந்ததும், கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.