ஆஹா… பார்த்தாலே சாப்பிடணும் போல இருக்கு… வித்தியாசமான முறையில் அசத்தலான தேங்காய் சட்னி!!!

Author: Hema
14 September 2021, 9:34 am
Quick Share

இந்திய சமையலறைகளில், குறிப்பாக தென்னிந்தியாவில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் பொருட்களில் தேங்காய் ஒன்றாகும். இது எந்த சாதாரண உணவிற்கும் உடனடியாக அதன் சுவையை உயர்த்துகிறது. அதோடு மட்டும் அல்லாமல் பல ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. தேங்காய் சட்னி தோசை, இட்லி, வடை மற்றும் ஊத்தப்பம் போன்ற பொருட்களுக்கு சரியான துணையாக செயல்படுகிறது.

பல்வேறு செரிமானம் தொடர்பான பிரச்சினைகளுக்கு உதவுவதற்காக அறியப்பட்ட தேங்காய் சட்னியை வீட்டிலேயே சில எளிய வழிமுறைகளுடன் எளிதாக தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்:
*1 முழு தேங்காய்
*3-4 பச்சை மிளகாய்
*½ தேக்கரண்டி சீரகம்
*2 தேக்கரண்டி வறுத்த பொட்டுக்கடலை
*6-8 முந்திரி பருப்புகள்
*1 அங்குல இஞ்சி
*சுவைக்கு உப்பு
*½ எலுமிச்சை சாறு
*2 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் / சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்
*1 தேக்கரண்டி கடுகு விதைகள்
*1 தேக்கரண்டி உளுத்தம்பருப்பு
*1/4 தேக்கரண்டி வெந்தய விதைகள்
*2 காய்ந்த சிவப்பு மிளகாய்
*1 கொத்து கறிவேப்பிலை

செய்முறை:
ஒரு மிக்ஸி ஜாரில், தேங்காய், பச்சை மிளகாய், சீரகம், வறுத்த பொட்டுக்கடலை, முந்திரி, இஞ்சி, உப்பு சேர்த்து நன்றாக அரைக்கவும்.
இதற்கிடையில் தாளிக்க ஒரு கடாயில் எண்ணெயை சூடாக்கி, கடுகு, வெந்தய விதைகள், உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
இப்போது அரைத்த தேங்காய் விழுதை ஒரு பாத்திரத்தில் தேங்காய் சேர்த்து, எலுமிச்சை சாறு மற்றும் தாளிப்பில் பாதியை சேர்த்து, பிறகு எல்லாவற்றையும் சரியாக கலக்கவும்.
பரிமாறும் கிண்ணத்தில் வைத்து, மீதமுள்ள தாளிப்புடன் அலங்கரிக்கவும்.

Views: - 291

0

0

Leave a Reply