இப்படி கார சட்னி செய்து கொடுத்தால் கணக்கே தெரியாம இட்லி சாப்பிடுவாங்க…!!!

16 January 2021, 9:21 am
Quick Share

பொதுவாக கார சட்னி பலரது ஃபேவரெட் டிஷ். இன்று நாம் பார்க்க இருப்பது ஒரு அற்புதமான கார சட்னி ரெசிபி தான். இது இட்லி, தோசை, சப்பாத்திக்கு மிக அருமையான காம்பினேஷன். அது மட்டும் இல்லாமல் சூடான சாதத்திற்கும் இந்த சட்னி சேர்த்து சிறிது நல்லெண்ணெய் அல்லது நெய் சேர்த்து சாப்பிடலாம். இப்போது இந்த கார சட்னி எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க…

தேவையான பொருட்கள்:

சின்ன வெங்காயம்- 100 கிராம்

பெரிய வெங்காயம்- 1

தக்காளி- 2

காய்ந்த மிளகாய்- 4

காஷ்மீரி மிளகாய்- 4

பூண்டு- 5 பல்

வெல்லம்- சிறிய துண்டு

சீரகம்- 1/2 தேக்கரண்டி

கடுகு- 1/2 தேக்கரண்டி

கறிவேப்பிலை- ஒரு கொத்து

நல்லெண்ணெய்- 3 தேக்கரண்டி

செய்முறை:

சட்னி செய்வதற்கு முதலில் நாம் ஒரு பேஸ்டை தயார் செய்து கொள்ளலாம். அதற்கு ஒரு மிக்ஸி ஜாரில் சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம், தக்காளி, சீரகம், பூண்டு, சிறிய துண்டு வெல்லம், காய்ந்த மிளகாய், காஷ்மீரி மிளகாய் ஆகியவற்றை சேர்த்து அரைக்கவும். இதனை அரைக்க தண்ணீர் எதுவும் ஊற்ற வேண்டாம். 

இப்போது ஒரு கடாயை அடுப்பில் வைத்து மூன்று தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றவும். இதில் கடுகு மற்றும் கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். அடுத்து நாம் அரைத்து வைத்த பேஸ்டை சேர்த்து விடலாம். உங்களுக்கு பச்சை வாசனை பிடிக்கும் என்றால் இரண்டு நிமிடங்கள் மட்டும் கிளறி விட்டு பிறகு இறக்கி விடலாம். அல்லது ஐந்து நிமிடங்கள் மிதமான தீயில் மூடி வைத்து சமைத்து பிறகு இறக்கலாம். தொக்கு பதத்திற்கு வேண்டும் என்று நினைப்பவர்கள் மேலும் இரண்டு நிமிடங்கள் சிம்மில் வைத்து இறக்கலாம். செம டேஸ்டான கார சட்னி இப்போது தயார். 

Views: - 1

0

0