வாரம் ஒரு முறை உங்கள் உணவு பட்டியலில் கட்டாயம் இருக்க வேண்டிய சத்து மிகுந்த கீரை கிச்சடி!!!

1 August 2020, 11:42 am
Quick Share

கிச்சடி என்பது ஒவ்வொருவரின் சுவைக்கு ஏற்ப பல வழிகளில் தயாரிக்கப்படலாம். சிலர் வெறும் ஒரு பயறு வகைகளை கொண்டு கிச்சடி செய்வார்கள். மற்றவர்கள்  நிறைய காய்கறிகளைச் சேர்க்க விரும்புகிறார்கள். 

இன்று நாம் பார்க்க இருப்பது முற்றிலும் வித்தியாசமான பாலக் கிச்சடி. பாலக் என்பதன் அர்த்தம் கீரை ஆகும். ஆம்… கீரையை வைத்து தான் இன்று கிச்சடி செய்ய போகிறோம். அதனை எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க….

தேவையான பொருட்கள்:

கீரை- 20 கிராம்

அரிசி- 20 கிராம்

துவரம் பருப்பு- 5 கிராம்

பட்டாணி- 5 கிராம் 

ப்ரோக்கோலி- 5 கிராம்

வெங்காயம்- 10 கிராம்

பச்சை மிளகாய்- 1

நெய்- 1 தேக்கரண்டி

பூண்டு- ½ தேக்கரண்டி

சீரகம்- ½ தேக்கரண்டி

பெருங்காயம்- ஒரு சிட்டிகை

மிளகாய் தூள்- ஒரு சிட்டிகை

உப்பு- சுவைக்கு ஏற்ப 

மஞ்சள் தூள்- ஒரு சிட்டிகை

செய்முறை:

* காய்கறிகள், அரிசி, பருப்பு ஆகியவற்றை தனித்தனியாக கழுவி வைக்கவும்.

* பிரஷர் குக்கரை எடுத்து அரிசி, பருப்பு, ப்ரோக்கோலி, பட்டாணி, மஞ்சள், ஒரு சிட்டிகை பெருங்காயம், ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து 1-2 கப் தண்ணீர் ஊற்றி பிரஷர் குக்கரில் போட்டு  சமைக்கவும்.

* ஒரு தனி வாணலியில், கீரை மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். பின்னர் கீரையை குளிர்ந்த நீருக்கு மாற்றவும். சிறிது நேரம் கழித்து, கீரையை கடைந்து பேஸ்டாக மாற்றவும்.

* பின்னர் ஒரு வாணலியை எடுத்து, சிறிது நெய் / எண்ணெய் ஊற்றி சீரகம், நறுக்கிய பூண்டு, பச்சை மிளகாய் போட்டு தாளித்து நறுக்கிய வெங்காயம் சேர்த்து, அவை நிறம் மாறும் வரை சமைக்கவும்.

* பின்னர் கீரை விழுது சேர்த்து சமைக்கவும்.

* இப்போது வேக வைத்த அரிசி மற்றும் பருப்பு கலவையை சேர்த்து நன்கு கலக்கவும்.

* மசாலாப் பொருட்கள் அரிசி மற்றும் பருப்போடு சேர்ந்து வருமாறு நன்கு கலக்கவும். 5 – 7 நிமிடங்கள் வரை  சமைத்து அடுப்பை அணைத்து விடலாம்.

* இதற்கு காரசாரமான சட்னி அட்டகாசமான காம்பினேஷன்.

இந்த கிச்சடியின் நன்மைகள்: 

●கீரையின் மூலமாக  வைட்டமின் A, வைட்டமின் K, ஃபோலேட், மெக்னீசியம் மற்றும் இரும்புச்சத்து ஆகியவை கிடைக்கும். இது இரத்த உறைதலைப் போக்க உதவுகிறது. நோயெதிர்ப்பு செயல்பாட்டை ஊக்குவிக்கிறது மற்றும் திசு வளர்ச்சிக்கு அவசியம். 

●இந்த செய்முறையானது எடை இழப்பை ஊக்குவிப்பதற்கும் உங்கள் உடலை நச்சுத்தன்மை அற்றதாக மாற்றுவதற்கும் அனைத்து பண்புகளையும் கொண்டுள்ளது. 

●சிறிய அளவிலான நெய் மேக்ரோநியூட்ரியன்களின் சிறந்த மூலமாகும். 

●மஞ்சள் தூள் மூட்டு வலியை நீக்குகிறது.

Views: - 0

0

0