அசத்தலான ருசியில் கோலாபுரி மட்டன் கறி!!!

29 March 2021, 12:29 pm
Kolhapuri Mutton Curry - Updatenews360
Quick Share

எப்போதும் ஒரே மாதிரியான உணவுகளை செய்து சாப்பிடுவதற்கு பதிலாக வித்தியாசமான உணவுகளை முயற்சி செய்து உங்கள் வீட்டில் உள்ள அனைவரையும் அசத்த ஒரு அருமையான கோலாபுரி மட்டன் கறி  ரெசிபியை தான் இந்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். இது சூடான சாதத்துடன் மட்டும் இல்லாமல் சப்பாத்தி, பூரி, இட்லி, தோசைக்கும் நல்ல காம்பினேஷன். இப்போது கோலாபுரி மட்டன் கறி எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க…

தேவையான பொருட்கள்:

மட்டன் – 1/2 கிலோ பெரிய வெங்காயம் – 100 கிராம், இஞ்சி-பூண்டு விழுது – 2 கரண்டி  கொத்தமல்லித்தழை – சிறிதளவு

எண்ணெய் – 30 மில்லி உப்பு – தேவையான அளவு 

அரைப்பதற்கு: 

பெரிய வெங்காயம் – 50 கிராம்

தேங்காய்த்துருவல் – 30 கிராம்

காய்ந்த மிளகாய் – 8 முழுமல்லி – 2 கரண்டி  சீரகம் – அரை கரண்டி  வெள்ளை எள் – 1 1/2  டீஸ்பூன்

கசகசா – 2 கரண்டி 

கிராம்பு – 2

செய்முறை:

*கோலாபுரி மட்டன் கறி செய்வதற்கு முதலில் மட்டனை சுத்தமாக கழுவி அதனுடன் மஞ்சள் தூள் சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

*ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெயை சூடாக்கவும்.

*எண்ணெய் சூடானதும் அதில் அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து வறுக்கவும்.

*வறுத்த பொருட்கள் ஆறியதும் அதனை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து எடுக்கவும்.

*அதே கடாயில் மேலும் எண்ணெய் ஊற்றி நறுக்கிய பெரிய வெங்காயம் போட்டு வதக்கவும்.

*வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

*இஞ்சி பூண்டின் பச்சை வாசனை போனதும் ஊற வைத்துள்ள மட்டன் துண்டுகளை சேர்க்கவும்.

*குழம்புக்கு தேவையான அளவு உப்பு மற்றும் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்க்கவும்.

*தேவைப்பட்டால் தண்ணீர் ஊற்றி கொள்ளுங்கள்.

*எண்ணெய் பிரிந்து வரும்போது சிறிதளவு சூடான தண்ணீர் ஊற்றவும்.

*கறி சாஃப்டாக வெந்து குழம்பு கெட்டியானதும் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

Views: - 3

0

0