இனி உங்க பிள்ளைகள் நொறுக்கு தீனி கேட்டா இந்த ஆரோக்கியமான ஸ்நாக்ஸை செய்து கொடுங்க!!!

19 April 2021, 4:33 pm
Quick Share

சிலருக்கு வெண்ணெய் பிடிக்கும். ஆனால் உடல் எடை அதிகரித்து விடுமோ என்ற பயத்தில் அதனை சாப்பிடுவதை தவிர்ப்பார்கள். நீங்களும் இதில் ஒருவராக இருந்தால் உங்களுக்கு ஓரு நல்ல செய்தி காத்திருக்கிறது. ஆம், உங்கள் எடையை அதிகரிக்காமல் உங்கள் இனிப்பு ஏக்கத்தை பூர்த்தி செய்ய உதவும் வேர்க்கடலை கேக் எப்படி செய்வது என இந்த பதிவில் பார்ப்போம். இது ருசியாக இருப்பதோடு, மிகவும் ஆரோக்கியமான ஒன்றாகவும் உள்ளது.

தேவையான பொருட்கள்:

50 கிராம் உப்பு சேர்க்காத வேர்க்கடலை

250 கிராம் உப்பு சேர்க்காத வேர்க்கடலை வெண்ணெய்

1 பழுத்த வாழைப்பழம்

3 தேக்கரண்டி தேன்

10 கிராம் அக்ரூட் பருப்புகள்

10 கிராம் பாதாம் பருப்பு

10 கிராம் உலர்ந்த திராட்சை

செய்முறை:

ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் தண்ணீர் ஊற்றவும். ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் வேர்க்கடலை வெண்ணெயை சேர்க்கவும். இந்த பாத்திரத்தை கடாய் மீது வைத்து வெண்ணெயை  உருக விடவுதம். இது டபுள் பாய்லர் முறையாகும். இவ்வாறு செய்யும்போது வெண்ணெய் கருகி போகாமல் இருக்கும்.  

உருகிய வெண்ணெயில்  தேன் சேர்க்கவும். உங்களிடம் தேங்காய் சர்க்கரை இருந்தால் தேனுக்கு பதிலாக அதனைக் கூட பயன்படுத்தலாம். 

இப்போது, ​​இந்த வெண்ணெய் கலவையில் ஒரு பழுத்த வாழைப்பழத்தை சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். அரைத்த பின் இதனை  ஒரு கிண்ணத்திற்கு  மாற்றவும்.

அடுத்து, ஒரு உரலில்  வேர்க்கடலை, பாதாம் மற்றும் அக்ரூட் பருப்புகளை போட்டு அவற்றை தோராயமாக நசுக்கவும். இந்த உலர்ந்த பழங்களை வேர்க்கடலை வெண்ணெய் கலவையில் சேர்த்து, நன்றாக கலக்கவும்.

இப்போது, ​​ஒரு தட்டு  எடுத்து இந்த கலவையை சமமாக அதில் பரப்பவும். சிறிது நேரம் இதனை அப்படியே வைக்கவும்.

பின்னர் சிறிய துண்டுகளாக வெட்டி, சந்தோஷமாக அனுபவியுங்கள்.

Views: - 98

0

0