குளிர் காலத்திற்கு ஏற்ற இந்த பீட்ரூட் நெல்லிக்காய் சூப்பை சூடாக செய்து சாப்பிட்டு மகிழுங்கள்!!!

23 November 2020, 10:08 am
Quick Share

சூப் என்றாலே அது ஆரோக்கியமானது தான். அனைத்து வகையான ஊட்டச்சத்துக்களும் நிறைந்த சூப்பை அடிக்கடி செய்து சாப்பிடுவது உடலின் ஆரோக்கியத்தை தக்க வைக்க உதவும். இன்று நாம் பார்க்க இருப்பது ருசி மற்றும் ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் நெல்லிக்காய் சூப். ஆரோக்கியமான இந்த  சூப்பை உங்கள் வீட்டில் செய்து பார்த்து பயனடையுங்கள். 

தேவையான பொருட்கள்:

*1 பெரிய தக்காளி அல்லது  

*2 நெல்லிக்காய் 

*1 நடுத்தர அளவு பீட்ரூட் 

*200 கிராம் (சுரைக்காய் / பூசணி / கேரட் / சேனைக்கிழங்கு /சர்க்கரை வள்ளிக்கிழங்கு / வேறு எந்த ஒரு காய்கறி) 

*12-15 கீரை இலைகள் 

*6-7 பூண்டு பற்கள் 

*1 அங்குலம் அளவு இஞ்சி 

*2 அங்குலம் அளவு பச்சை  மஞ்சள் 

*அழகுபடுத்த கொத்தமல்லி அல்லது புதினா இலைகள் 

*4 கப் தண்ணீர் 

*ருசிக்க கல் உப்பு *சுவையூட்டுவதற்கு கருப்பு / வெள்ளை மிளகு 

*1 தேக்கரண்டி வெண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் 

*1 தேக்கரண்டி புதிய எலுமிச்சை சாறு 

செய்முறை: 

1. அனைத்து காய்கறிகளையும் நன்றாக கழுவி ஒரு அகலமான பாத்திரத்தில் சேர்க்கவும். 

2. இதில் தண்ணீர் ஊற்றி மூடி போட்டு நீராவியில் வேக வைத்து கொள்ளுங்கள். தண்ணீர் அதிகமாக ஊற்றி விட வேண்டாம். 

3. அனைத்து காய்கறிகளும் வெந்ததும், அவற்றை ஆற வைக்கவும். ஒரு மத்தை பயன்படுத்தி  அனைத்தையும் மசித்து  கொள்ளுங்கள். 

4. இப்போது நீங்கள் வேகவைத்த இஞ்சி மற்றும் பச்சை மஞ்சள் ஆகியவற்றை அரைத்து சேர்க்க வேண்டும். 

5. இதை அடுப்பில் வைத்து ஒரு கொதி வரும் வரை காத்திருக்கவும். ஒரு கொதி வந்தபின் கல்  உப்பு மற்றும் மிளகு சேர்க்கவும். 

6. ஒரு சிறிய தூறல் வெண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயுடன் சூடாக பரிமாறவும். 

7. ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்தினால், நீங்கள் சில துளிகள் எலுமிச்சை சாற்றைக் கூட சேர்க்கலாம். கிடைக்கக்கூடிய ஃபிரஷ்  மூலிகைகள் அனைத்தையும் கொண்டு அலங்கரிக்கவும்.

Views: - 0

0

0