மாங்காய் சாதம்: இத ஒரு முறை செய்து விட்டால் போதும் அடிக்கடி செய்ய ஆரம்பிச்சுடுவீங்க…!!!

23 February 2021, 10:06 am
Quick Share

மாங்காய் பிடிக்காது என்று யாராவது சொல்லுவாங்களா… கண்டிப்பா இல்லை. மாங்காய் பார்த்தாலே நமக்கு வாயில் எச்சில் ஊறும். இந்த மாங்காய் கொண்டு ஒரு டேஸ்டான மற்றும் புளிப்பான மாங்காய் சாதம் செய்வது எப்படி என கற்றுக் கொள்ளலாம். இது செய்வதற்கு ஈசியாக இருக்கும். அதோடு நம் வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டே இதனை செய்து விடலாம்.

தேவையான பொருட்கள்: 

1 கப் வேகவைத்த சாதம் 

1 துருவிய மாங்காய்

10 பச்சை மிளகாய்

தேவையான அளவு பெருங்காயம்

தேவையான அளவு மஞ்சள் தூள் 

1 தேக்கரண்டி கடுகு விதைகள்

1 தேக்கரண்டி உளுத்தம்  பருப்பு

1/2 கப் பச்சை வேர்க்கடலை

ஒரு கொத்து  கறிவேப்பிலை

1 கைப்பிடியளவு நறுக்கிய கொத்தமல்லி இலை

1 கப் துருவிய தேங்காய்

1 தேக்கரண்டி வெந்தய தூள்

தேவையான அளவு உப்பு

1/2 கப் எண்ணெய்

செய்முறை:

* மாங்காய் சாதம் செய்வதற்கு முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் மஞ்சள் தூள், பெருங்காயப் பொடி மற்றும் பச்சை மிளகாய் ஆகிய மூன்றையும் கொர கொரப்பாக அரைத்து கொள்ளவும்.

*ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகு, உளுத்தம்பருப்பு மற்றும் வேர்க்கடலை ஆகியவற்றை சேர்த்து தாளிக்கவும். 

*தாளித்த பின் நாம் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து மூன்று நிமிடங்கள் வதக்கவும்.

*அடுத்து பொடியாக  நறுக்கிய கொத்தமல்லி இலைகள், வெந்தயத் தூள், வேக வைத்த சாதம் மற்றும் துருவிய மாங்காய் ஆகியவற்றை சேர்க்கவும். 

*அனைத்து பொருட்களையும் நன்கு கிளறவும்.

*அதிக புளிப்பு கொண்ட மாங்காய் என்றால் சிறிதளவு சர்க்கரை சேர்த்து கொள்ளவும். 

*கடைசியாக துருவிய தேங்காய் மற்றும் சாதத்திற்கு தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி அடுப்பை அணைத்து விடலாம்.

*அவ்வளவு தான்… ருசியான மாங்காய் சாதம் தயார். இதனை சட்னியுடன் சூடாக பரிமாறவும்.

Views: - 14

0

0