மாங்காய் சீசன் வரப்போகுது… இந்த ரெசிபிகளை செய்து அசத்துங்கள்!!!

3 March 2021, 9:08 am
Quick Share

மாங்காய் என்று சொன்னாலே நமக்கு  வாயில் எச்சில் ஊற ஆரம்பித்து விடும். பழங்களின் ராஜா என்று புகழப்படும் மாம்பழங்கள் அத்தியாவசிய ஊட்டச்சத்து மற்றும் வைட்டமின் C சத்தை அதிக அளவில் கொண்டுள்ளது. பச்சை மாங்காயும் இதற்கு சளைத்தது அல்ல.  இந்தியா போன்ற வெப்பமண்டல நாடுகளில் மாங்காய் அதிகமாக வளர்க்கப்படுகிறது. நாம் சிறு வயதில் மாங்காயை வெட்டி அதனோடு உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து சாப்பிடுவோம். ஆனால் மாங்காயை கொண்டு பல விதமான உணவு வகைகளை நம்மால் தயார் செய்ய முடியும். கோடைகாலம் கிட்டத்தட்ட நெருங்கி விட்டதால் மாங்காய் சீசன் ஆரம்பித்து விடும். எனவே மாங்காய் வைத்து என்னென்ன ரெசிபிகள் செய்யலாம் என்பது பற்றி இப்போது பார்க்கலாம்.   

பச்சை மாங்காயின்  ஆரோக்கிய நன்மைகள்: 

மாங்காயை பச்சையாக சாப்பிடுவது நமக்கு பல வழிகளில் உதவும். இதில் வைட்டமின் A மற்றும் வைட்டமின் E ஆகியவை நிறைந்துள்ளன. இது ஒருவரின் ஹார்மோன் அமைப்பை மேம்படுத்துகிறது. இது நீரிழப்பைத் தடுக்கிறது. மாங்காயில் சோடியம் குளோரைட்டின்  நிறைந்திருக்கிறது. இது மலச்சிக்கல், வீக்கம், அஜீரணம் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற வயிற்று கோளாறுகளை குணப்படுத்துகிறது. கல்லீரலில் உள்ள  நச்சுகளை நீக்கி கல்லீரலை சுத்தப்படுத்தி பித்த அமிலத்தின் சுரப்பை ஊக்குவிக்கிறது. இதில் வைட்டமின் C, கால்சியம், மெக்னீசியம் அதிகம் உள்ளது. இது உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்ற பயன்படுகிறது. மாங்காயில் நியாசினும் அதிகம் உள்ளது. இது இருதய ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவுகிறது. ஆரோக்கியமான கொழுப்பின் அளவு நீரிழிவு, இதய நோய், பக்கவாதம் மற்றும் மாரடைப்பு போன்ற நாட்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது. மேலும் இது  சருமத்திற்கும் கூந்தலுக்கும் நல்லது. 

1. மாங்காய் சாலட்: 

மாங்காய், வெங்காயம், மிளகாய், புதினா, கீரை மற்றும் சர்க்கரை போன்ற ஆரோக்கியமான பொருட்களால் தயாரிக்கப்படும் இந்த சாலட் இனிப்பு, காரம்  மற்றும் புளிப்பு சுவைகளின் சரியான கலவையாகும்.

2. மாங்காய் பானம்: 

இது பெரும்பாலும் கோடைகாலங்களில் தயாரிக்கப்படும் மிகவும் விரும்பப்படும் புத்துணர்ச்சியூட்டும் பானமாகும். இது நம் உடல்களை உள்ளிருந்து ஹைட்ரேட் செய்து குளிர்விப்பதாகவும், கடுமையான வெப்பம் மற்றும் நீரிழப்பிலிருந்து நம்மைப் பாதுகாப்பதாகவும் அறியப்படுகிறது. இந்த உற்சாகமான பானம் பச்சை மாங்காய், சர்க்கரை மற்றும் புதினா ஆகியவற்றைக் கொண்டு மட்டுமே தயாரிக்கப்படுகிறது.

3. பச்சை மாங்காய் மற்றும் பருப்பு: 

மாங்காயை நம் அன்றாட இரவு உணவு வகைகளில் எளிதாக சேர்க்கலாம். பச்சை மாங்காய் மற்றும்  பருப்பு குறிப்பாக இந்திய வீடுகளில் அதன் புளிப்பு சுவைக்காக விரும்பப்படுகிறது. இது  உத்தரபிரதேசத்தில் தயார் செய்யப்படும் ஒரு  பிரபலமான உணவாகும்.

4. மாங்காய் பச்சடி:

பச்சடி என்பது தென்னிந்திய உணவு வகைகளிலிருந்து உருவாகும் ஒரு பிரபலமான உணவாகும்.  இது தயிர், மிளகாய் மற்றும் தேங்காயுடன் தயாரிக்கப்படும் ஒரு பாரம்பரிய உணவாகும். இது பொதுவாக பண்டிகை சந்தர்ப்பங்களில் செய்யப்படுகிறது. இது ஒரு சுவையான சைட் டிஷ் ஆகும். இது தோசை, எலுமிச்சை சாதம் ஆகியவற்றிற்கு சிறந்த சைட் டிஷாகும். 

5. மாங்காய் சாதம்:

மாங்காய் சாதம் ஒரு  சுவையான மற்றும்  சுவாரஸ்யமான செய்முறையாக அமைகிறது. இது அரிசி, பச்சை மாங்காய், கறிவேப்பிலை, வேர்க்கடலை மற்றும் வறுத்த பயறு வகைகளால் செய்யப்படுகிறது. இது மதிய உணவு மற்றும் இரவு உணவு செய்முறையாகும்.

Views: - 43

0

0