மீண்டும் மீண்டும் சாப்பிட தூண்டும் முதலியார் ஸ்டைல் ஆம்லெட் கிரேவி!!!

20 February 2021, 9:15 am
Quick Share

ஆம்லெட் என்றால் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். இந்த ஆம்லெட் வைத்து ஒரு ருசியான குழம்பு ரெசிபியை கூட செய்யலாம். இது ஒரு அட்டகாசமான கிரேவி ஆகும். இது சப்பாத்தி, பூரி, வெள்ளை சாதம் ஆகியவற்றிற்கு செம காம்பினேஷனாக இருக்கும். இன்று நாம் பார்க்க இருப்பது முதலியார் ஸ்டைல் ஆம்லெட் கிரேவி. 

தேவையான பொருட்கள்:

முட்டை – 2

வெங்காயம் – 1 

பச்சை மிளகாய் – 1 

கொத்தமல்லி – சிறிதளவு

உப்பு – சுவைக்கேற்ப

வெங்காய விழுது செய்ய:-

வெங்காயம் – 1 

பச்சை மிளகாய் – 2

மல்லி – 1 தேக்கரண்டி

மிளகு – 2 தேக்கரண்டி

இஞ்சி – 1 இன்ச்

பூண்டு – 4 பற்கள்

கொத்தமல்லி – சிறிதளவு

புதினா இலைகள் – சிறிதளவு

தக்காளி – 1

தேங்காய் விழுது:

துருவிய தேங்காய் – 2 தேக்கரண்டி

கசகசா – 1 தேக்கரண்டி

தயிருக்கு:-

தயிர் – 1/2 கப்

மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி

உப்பு – சுவைக்கேற்ப

தாளிக்க:-

எண்ணெய் – 2 தேக்கரண்டி

பட்டை – 1 துண்டு

ஏலக்காய் – 1

கறிவேப்பிலை – ஒரு கொத்து

வெங்காயம் – 1 

கொத்தமல்லி – சிறிதளவு  (அலங்கரிக்க)

செய்முறை:

* ஆம்லெட் கிரேவி செய்வதற்கு முதலில் ஒரு சிறிய பாத்திரத்தில் முட்டை, வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து நன்கு அடித்து கொள்ளவும்.

*இப்போது ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி முட்டை கலவையை ஊற்றவும்.

*இதனை இரு பக்கத்திலும் வேக வைத்து ஆம்லெட்டாக வேக வைத்து எடுங்கள்.

*அடுத்து வெங்கா விழுதிற்காக வைத்துள்ள பொருட்களை மிக்ஸி ஜாரில் சேர்த்து நைசாக அரைக்கவும்.

*இதே போல தேங்காய் விழுதையும் அரைத்து வைக்கவும். 

*இப்போது அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் நன்றாக சூடானதும் தாளிக்க வைத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்கவும். 

*பிறகு வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக மாறியதும் அரைத்து வைத்து வெங்காய விழுது மற்றும் தேங்காய் விழுதை சேர்த்து வதக்கவும்.

*இதன் பச்சை வாசனை போகும் வரை இருபது நிமிடங்கள் வதக்கவும்.

*பிறகு சிறிதளவு தண்ணீர்  

மற்றும் தயிர் கலவையை ஊற்றவும். கிரேவிக்கு தேவையான அளவு உப்பு சேர்த்து இருபது நிமிடங்கள் கொதிக்க விடவும்.

*இறுதியில் ஆம்லெட்டை துண்டுகளாக சேர்த்து,  கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

Views: - 7

0

0

Leave a Reply