இந்த காபி ஒரு முறை செய்தால் தினமும் போட்டு குடிப்பீங்க!!!

25 January 2021, 8:04 am
Quick Share

நம்மில் பலர் ஒவ்வொரு  நாளையும் ஒரு கப் காபியுடன் தான் ஆரம்பிப்போம். அதிலும்  குளிர்கால காலையில் சூடான கப் காபி குடிக்கும் சுகமே தனி. காபியைப் பற்றிய சிறந்த அம்சம் என்னவென்றால், அதனை  ஒவ்வொருவரின் ரசனைக்கு ஏற்றபடி நாம் தயாரித்து கொள்ளலாம். அந்த வகையில் இன்று நாம் ஒரு ருசியான காபி செய்முறையை பற்றி பார்க்கலாம்.   

நியூட்டெல்லா காபி செய்ய 

தேவையான பொருட்கள்: 

3 தேக்கரண்டி இன்ஸ்டன்ட்  காபி தூள் 

1/2 கப் தண்ணீர் 

1 கப் பால் அல்லது கிரீம் 

1 தேக்கரண்டி சர்க்கரை  1/4 கப் நியூட்டெல்லா  

விப்ட் கிரீம்  

சாக்லேட் சாஸ் 

செய்முறை:

*இன்ஸ்டன்ட் காபி தூளை  தண்ணீரில் கலந்து கஷாயம் தயாரிக்கவும். 

*இதனை அடுப்பில் வைக்கவும். தீயை குறைத்து வைத்து கொள்ளுங்கள்.   

*கஷாயத்தோடு பால் / கிரீம், சர்க்கரை மற்றும் நியூட்டெல்லாவை  சேர்க்கவும். நியூட்டெல்லா உருகி மற்ற பொருட்களுடன் இணையும் வரை கிளறவும். பிறகு அடுப்பிலிருந்து அகற்றவும். 

*இதை ஒரு டம்ளருக்கு  ஊற்றி, விப்ட் கிரீம் மற்றும் சாக்லேட் சாஸை மேலே வைக்கவும். 

குறிப்பு: சர்க்கரை மற்றும் கிரீம் ஆகியவற்றை உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு சேர்த்து கொள்ளவும்.

Views: - 0

0

0