நெய் இல்லாமல் மூன்றே பொருட்கள் கொண்டு பத்து நிமிடத்தில் அல்வா தயார்!!!

11 September 2020, 7:54 pm
Quick Share

அல்வா என்றாலே அதனை செய்ய அதிக நேரம் எடுத்து கொள்ளும் என்ற ஒரு பொதுவான கருத்து நம்மிடையே உள்ளது. அதே போல நெய், வெண்ணெய் போன்ற பொருட்கள் அதிகப்படியாக தேவைப்படும் என்று நாம் நினைப்போம். ஆனால் இன்று நாம் செய்ய போகும் அல்வா வெறும் பத்தே நிமிடத்தில் தயார் செய்யக்கூடிய ஒன்று. இதற்கு நெய் சேர்க்க தேவையில்லை. மூன்றே பொருட்கள் கொண்டு இதனை எளிய முறையில் செய்து விடலாம். 

தேவையான பொருட்கள்:

பால்- 1/2 லிட்டர்

சர்க்கரை- 100 கிராம்

சோள மாவு- 75 கிராம்

ஏலக்காய்- 4

குங்கும பூ- சிறிதளவு

பாதாம் பருப்பு- 10

பிஸ்தா பருப்பு- 10

செய்முறை:

ஒரு அகலமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து 1/2 லிட்டர் தண்ணீர் சேர்க்காத பால் ஊற்றவும். பால் கொதித்து வரும்போது அதில் 100 கிராம் சர்க்கரை சேர்த்து கிளறவும். இதற்கு நீங்கள் நிறம் சேர்க்க விரும்பினால் இரண்டு தேக்கரண்டி பாலில் சிறிதளவு குங்கும பூவை ஊற வைத்து அதனை பாலோடு சேர்த்து கொள்ளவும். 

அடுத்து நான்கு ஏலக்காயை நன்றாக பொடி செய்து சேர்க்கவும். பால் இரண்டு நிமிடங்கள் கொதிக்கட்டும். 75 கிராம் சோள மாவை 1/2 கப் தண்ணீரில் கரைத்து அதனை பாலில் ஊற்றவும். இதனை ஊற்றிய பின் கை விடாமல் கிளறி கொண்டே இருக்க வேண்டும். இல்லையெனில் ஆங்காங்கே கட்டி கட்டியாக இருக்கும். 

சோள மாவு சேர்த்த பின் இரண்டு நிமிடங்கள் கிளறி அடுப்பை அணைத்து விடலாம். ஒரு கிண்ணத்தில் நெய் அல்லது வெண்ணெய் தடவி அதன் மீது பாதாம் மற்றும் முந்திரி பருப்பை தூவவும். இதன் மீது தயார் செய்து வைத்த அல்வாவை ஊற்றி நன்றாக ஆற விடவும். ஆறிய பிறகு துண்டாக்கி சாப்பிட்டு மகிழலாம்.

Views: - 0

0

0