பத்தே நிமிடத்தில் தயாராகும் ருசியான ரவை ஊத்தப்பம்!!!

23 September 2020, 9:30 am
Quick Share

என்ன தான் ஆயிரத்து எட்டு உணவு வகைகள் இருந்தாலும் என்ன சமையல் செய்வது என்ற குழப்பம் எல்லா பெண்களுக்கும் இருக்கும் ஒன்று தான். உங்கள் கவலையை போக்க இன்று நாம் பார்க்க இருப்பது ஒரு ருசி மிகுந்த  சிற்றுண்டியான ரவை ஊத்தப்பம். இதனை செய்வது மிக எளிது. அதே சமயம் சுவையாகவும் இருக்கும். 

தேவையான பொருட்கள்:

ரவை- 1 கப்

புளித்த தயிர்- 1/2 கப்

வெங்காயம்- 1

தக்காளி- 1

கேரட்- 1

கொத்தமல்லி தழை- சிறிதளவு

எண்ணெய்- 3 தேக்கரண்டி

உப்பு- தேவையான அளவு

செய்முறை:

ரவை ஊத்தப்பம் செய்ய முதலில் மாவு தயார் செய்து கொள்ளலாம். அதற்கு ஒரு அகலமான கிண்ணத்தில் ஒரு கப் ரவை, சிறிதளவு உப்பு மற்றும் 1/2 கப் புளித்த தயிர் சேர்த்து கிளறவும். பிறகு இதனை பத்து நிமிடங்களுக்கு மூடி வைத்து விடவும். 

ரவை தயிரில் பத்து நிமிடங்கள் ஊறிய பிறகு மீண்டும் 1/2 கப் தண்ணீர் ஊற்றி கலக்கவும். ஊத்தப்பம் செய்ய மாவு தயாராக உள்ளது. இதனை ஐந்து நிமிடங்களுக்கு பிறகு ஊற்றலாம். ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து கல் சூடானதும் ஒரு கரண்டி மாவை ஊற்றி லேசாக விரிக்கவும்.

ஊத்தப்பம் குண்டாக இருந்தால் தான் நன்றாக இருக்கும். அடுத்து பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, கேரட், கொத்தமல்லி தழை ஆகியவற்றை தூவவும். ஊத்தப்பத்தை சுற்றி எண்ணெய் அல்லது நெய் ஊற்றி கொள்ளுங்கள். ஒரு பக்கம் வெந்த பின் மற்றொரு பக்கம் திருப்பி போட்டு எடுத்து சூடாக பரிமாறவும்.

Views: - 11

0

0