குழந்தைகள் ஜாலியாக குடிக்கும் புத்துணர்ச்சியூட்டும் ருசியான மாம்பழ பானம்!!!

17 April 2021, 10:46 pm
Quick Share

கோடைகாலத்தில் நம் தாகத்தை தணிக்கும் பழங்களில் மாம்பழம் ஒன்று. இந்த இனிப்பான பழம் பழங்களின் ராஜா என்று அழைக்கப்படுகிறது.  

பழங்களின் ராஜாவான மாம்பழத்தில் ஏராளமான  நன்மைகள் உள்ளன. இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது ஆரோக்கியமான செரிமானத்திற்கு உதவுகிறது. ஜூஸியான மாம்பழத்தை வைத்து ஒரு அற்புதமான புத்துணர்ச்சி ரெசிபியை இந்த பதிவில் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

2 மாம்பழம்

1 தேக்கரண்டி தேன் 

½ கப் குறைந்த கொழுப்பு கிரீம்

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் கிரீம் எடுத்துக் கொள்ளுங்கள். இதனை ஒரு மின்சார பீட்டர் அல்லது கைகளால் நன்கு கலந்து கொள்ளவும். கிரீம் மிகவும்   மென்மையாகவும் பஞ்சுபோன்றதாகவும் ஆகும் வரை இதை நன்றாக அடிக்கவும். 

மாம்பழத் துண்டுகளை கூழாக அரைத்து கொள்ளுங்கள். இதில்   மென்மையான கிரீம் சேர்த்து, நன்கு கலக்கவும்.

மாம்பழத்தை ஒரு டம்ளரில் ஊற்றவும். பிறகு  20-30 நிமிடங்கள் குளிர்சாதன பெட்டியில் மூடி வைக்கவும். அவ்வளவு தான்… புத்துணர்ச்சியூட்டும் மாம்பழ பானம் தயாராக உள்ளது. 

மாம்பழ பானத்தின் நன்மைகள்: 

* மாம்பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது ஆரோக்கியமான செரிமானத்திற்கு உதவுகிறது.

* மாம்பழத்தில் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது. இது கண் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

* மாம்பழங்கள் வைட்டமின்கள் C மற்றும் A ஆகியவற்றின் சிறந்த மூலமாகும். இது ஆரோக்கியமான சருமத்தை பராமரிக்க உதவுகிறது.

* எனவே பெண்கள், எந்தவித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் இந்த ஆரோக்கியமான பானத்தை அனுபவிக்கலாம்!

Views: - 25

0

0