ரசித்து ரசித்து சாப்பிட சுட சுட ரவை குலாப் ஜாமுன்!!!

6 February 2021, 9:43 am
Quick Share

இந்திய இனிப்புகளைப் பொறுத்தவரை, ஒருவரின் நினைவுக்கு வரும் முதல் விஷயங்களில் ஒன்று குலாப் ஜாமுன். சூடான குலாப் ஜமுன் சாப்பிடுவதை நாம் விரும்புவதைப் போல, நம்மில் பலர் இதை வீட்டில்  செய்து பார்க்க ஆசைப்படுவோம். ஆனால் ஒரு சிலருக்கு இது சொதப்பி விடும். நீங்கள் செய்முறையை சரியாகப் பின்பற்றினால் குலாப் ஜாமுன் தயாரிப்பது அவ்வளவு கடினம் அல்ல.

தேவையான பொருட்கள்:- 

சர்க்கரை பாகு: 

4 கப் – சர்க்கரை

2 கப் – நீர்

ஒரு பிஞ்ச் – குங்குமப்பூ இழைகள்

ஒரு சிட்டிகை – ஏலக்காய் தூள்

½ – எலுமிச்சை சாறு

மாவு பிசைய:

2 கப் / 500 மில்லி – பால்

1 தேக்கரண்டி – ரோஸ்வாட்டர் 

1/2 தேக்கரண்டி – ஏலக்காய் தூள்

1 கப் – ரவை

2 தேக்கரண்டி – நெய்

10 – பிஸ்தா பருப்புகள்

செய்முறை:-

சர்க்கரை பாகு:

* ஒரு கடாயை சூடாக்கி சர்க்கரை மற்றும் தண்ணீரை சேர்க்கவும். இரண்டையும் நன்றாக  கலக்கவும்.

*இதில் சில குங்குமப்பூ இழைகள், ஏலக்காய் தூள், சிறிது எலுமிச்சை சாறு சேர்க்கவும். சர்க்கரை பாகு  ஒரு கொதி வந்த பின் அடுப்பை அணைக்கவும்.

* சர்க்கரை பாகை இரண்டு கிண்ணங்களில் பாதியாக ஊற்றி பிரிக்கவும்.

* ஒரு கிண்ணத்தில் மட்டும், சுமார் ¾ கப் தண்ணீர் சேர்க்கவும்.

மாவு பிசைய: 

* ஒரு கடாயை சூடாக்கி பால் சேர்க்கவும். சிறிது ரோஸ் வாட்டர் (விரும்பினால்) மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து கொதிக்க வைக்கவும்.

* நீங்கள் பாலைக் கிளறிக்கொண்டே இருக்கும்போது ரவையை கொஞ்சம் கொஞ்சமாக   சேர்க்கவும்.

* அடுப்பை அணைத்து, கலவையை கெட்டியாகும் வரை கைவிடாமல் தொடர்ந்து கிளறவும்.

* சிறிது நெய் சேர்த்து கலவையை மென்மையாக்கவும்.

* ஒரு பாத்திரத்திற்கு இந்த  மாவை மாற்றவும்.

* இது மென்மையாக மாறும் வரை ஒரு கரண்டியால் பிசைந்து கொள்ளுங்கள். அது முழுமையாக குளிர்ச்சியடையாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இல்லையென்றால் அது வறண்டு போகும்.

* ஒரு தட்டில், சிறிது நெய் அல்லது எண்ணெய் தடவவும்.

* உங்கள் கைகளால் மாவை பிசைந்து கொள்ளுங்கள். ஒரு சிறிய பகுதியை எடுத்து உங்கள் உள்ளங்கைகளுக்கு இடையில் வைத்து குலாப் ஜாமுன் வடிவத்தில் உருட்டவும்.

* நீங்கள் குலாப் ஜாமுனில் சிறிது நறுக்கிய பிஸ்டாவைச் சேர்த்து மீண்டும் உருட்டலாம். குலாப் ஜமுனில் எந்தவிதமான விரிசல்களும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

குலாப் ஜாமுன்:

* ஒரு கடாயில் சமையல் எண்ணெயை ஊற்றி நடுத்தர தீயில் சூடாக்கவும்.

* இப்போது குலாப் ஜாமுன் பந்துகளைச் சேர்த்து அவை பழுப்பு நிறமாக மாறும் வரை பொரிக்கவும்.

* பொரித்த குலாப் ஜாமுனை நேரடியாக தண்ணீரில் கலந்த சர்க்கரை பாகிற்கு  மாற்றவும். இதை சுமார் 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

* 30 நிமிடங்களுக்குப் பிறகு, குலாப் ஜமுன்களை தடிமனான சிரப் கிண்ணத்திற்கு மாற்றவும். 

Views: - 2

0

0