ரோஸ் லஸ்ஸி: செம டேஸ்டான புத்துணர்ச்சி பானம்!!!

3 April 2021, 4:30 pm
Quick Share

மகிழ்ச்சியை அதிகரிக்க சில மகிழ்ச்சியான உணவுகளை அவ்வப்போது நம் குடும்பத்தோடு சேர்ந்து அனுபவிக்க வேண்டும். அத்தகைய ஒரு ரெசிபியான ரோஸ் லஸ்ஸி தான் இந்த பதிவில் நாம் பார்க்க உள்ளோம். உங்கள் வீடுகளுக்கு விருந்தாளிகள் வந்தால் கூட இந்த பானத்தை நீங்கள் தயார் செய்து கொடுக்கலாம். ஏனெனில் இதனை மிக எளிதாக சட்டென்று செய்து விடலாம். அடிக்கும் வெயிலை சமாளிக்க சூப்பரான பானம் இது. 

கோடைக்காலம் பெரும்பாலும் நம்மை சோம்பலாகவும் சோர்வாகவும் ஆக்குகிறது. இதனை சமாளிக்க நம்மை நீரேற்றமாக வைப்பது மிகவும் அவசியம். ஆனால் அதற்காக எப்போதும் தண்ணீரே குடித்து கொண்டு இருந்தால் போர் அடிக்கும். இதனை எதிர்கொள்ள வகை வகையாக குளிர்பானங்களை செய்து பருகலாம். அந்த வகையில் ரோஸ் லஸ்ஸி எளிமையாக ஐந்து – ஆறு நிமிடங்களுக்கும் குறைவாகவே தயார் செய்யலாம். இது உங்களை  புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும். அதோடு சுவையாகவும் இருக்கும்.

தேவையான பொருட்கள்:

1 கப் தயிர்

2 கரண்டி ரோஸ் சிரப்

1 கரண்டி பொடித்த  சர்க்கரை

¼ கப் குளிர்ந்த நீர்

அலங்கரிக்க:

ரோஜா இதழ்கள்

செய்முறை:

*ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து  கலக்கவும். 

*இதனை குளிர்சாதன பெட்டியில் வைக்கவும்.

*ரோஜா இதழ்களால் அலங்கரித்து ஜில்லென்று  பரிமாறவும்.

Views: - 5

0

0