ஆகா! அடிக்கிற வெயிலுக்கு இப்படி ஒரு ரோஸ்மில்க் குடிச்சா எப்படி இருக்கும்! எப்படி செய்யனும் தெரியுமா?

1 April 2021, 5:56 pm
Rose Milk Recipe, How To Make Rose Milk | Rose Milk Shake
Quick Share

இன்னும் சித்திரை மாதம் ஆரம்பிக்க கூட இல்லை. ஆனால், வெயில் இப்போதே மண்டடையைப் பிளக்க ஆரம்பித்துவிட்டது. வெளியில் எங்காவது சென்றால் எப்போது வீட்டிற்குச் செல்வோம், ஜில்லென்று ஏதவாது குடிவிட்டு AC போட்டு ஓய்வெடுக்கலாம் என்றாகிவிடுகிறது. 

அந்த நேரத்தில் நீங்கள் ரோஸ்மில்க் குடித்தாலே நல்லாருக்குமே என்று தோன்றும். அதற்கு நீங்கள் காலையிலேயே ரோஸ்மில்க் தயார் செய்து ஃபிரிட்ஜில் வைத்துச்  செல்லலாம். இல்லையென்றால், கீழுள்ள செய்முறையைப் பின்பற்றி உங்களுக்கு வேண்டுமெனும்போது செய்துக்கொள்ளலாம். வீட்டிலேயே ரோஸ்மில்க் எப்படி செய்வதென்று இப்போது தெரிந்துக்கொள்ளலாம்.    

தேவையான பொருட்கள்:

 • உங்களுக்கு வேண்டுமளவுக்கு பால் (உங்கள் வீட்டிலிருக்கும் நபர்களுக்கு ஏற்ப)
 • 3 தேக்கரண்டி ரோஸ் சிரப்
 • 1 டீஸ்பூன் ரோஸ் வாட்டர்
 • ½ தேக்கரண்டி சர்க்கரை அல்லது தேவைக்கேற்ப சேர்த்துக்கொள்ளலாம். 
 • 1 டீஸ்பூன் சப்ஜா விதைகள் (திருநீற்று பச்சிலை விதைகள்) 
 • சப்ஜா விதைகள் ஊறவைக்க போதுமான நீர்.
 • சில ரோஜா இதழ்கள் (அழகுபடுத்த வேண்டுமென்றால்)

செய்முறை:

 • ஒரு பாத்திரத்தில் சப்ஜா விதைகளை போட்டு 15 முதல் 30 நிமிடங்கள் போதுமான தண்ணீரில் ஊற வைக்கவும். பின்னர் விதைகள் நன்கு ஊறிய பிறகு தனியே எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். 1 தேக்கரண்டி சப்ஜா விதைகள் ஊறிய பிறகு சுமார் 2 டீஸ்பூன் சப்ஜா விதைகள் அளவுக்கு இருக்கும். சப்ஜா விதைகள் உங்களுக்கு வேண்டுமென்றால் மட்டும் சேர்த்துக்கொள்ளலாம். நீங்கள் விரும்பினால் அதைத் தவிர்த்தும் கொள்ளலாம்.
 • ஒரு பாத்திரத்தில் தேவைக்கேற்ப பால் எடுத்து ரோஸ் சிரப் சேர்க்கவும்.
 • ரோஸ் சிரப் பாலில் கரையும் வகையில் நன்றாக கிளறவும். 
 • 1/2 டீஸ்பூன் அல்லது உங்கள் தேவைக்கேற்ப சர்க்கரையைச் சேர்க்கவும். ரோஸ்மில்கில்  அதிக இனிப்பை விரும்பினால் மட்டுமே சர்க்கரை சேர்க்கவும்.
 • பின்னர் ரோஸ் வாட்டர் சேர்க்கவும். சர்க்கரை கரையும் வரை நன்றாக கலக்கவும்.
 • கடைசியாக ஊறவைத்த சப்ஜா விதைகளை சேர்க்கவும்.
 • மீண்டும் நன்றாக கலக்கி, ரோஸ் மில்க்கை ஒரு டம்ப்ளரில் ஊற்றி கொள்ளுங்கள்.
 • சில ரோஜா இதழ்கள் அல்லது சில பாதாம் உடன் ரோஸ் அலங்கரித்து ரசித்து குடிக்கலாம். ஜில்லென்று வேண்டுமென்றால் ஃப்ரிட்ஜில் வைத்து பின்னர் ரோஸ் மில்க்கை குடிக்கலாம்.

Views: - 1

0

0