மணக்க மணக்க காரசாரமான கருணைக்கிழங்கு வறுவல்!!!

24 August 2020, 6:34 pm
Quick Share

ஒவ்வொரு உணவும் ஒவ்வொரின் கைப்பக்குவத்திற்கு ஏற்றவாறு அதன் சுவையானது மாறுபடும். இன்று நாம் பார்க்க இருப்பது கருணைக்கிழங்கு வறுவல். இதையும் ஒவ்வொருத்தர் ஒவ்வொரு முறையில் செய்வார்கள். அப்படி ஒரு செய்முறையை தான் நாம் பார்க்க இருக்கிறோம். 

தேவையான பொருட்கள்:

கருணைக்கிழங்கு- ஒன்று

மோர்- ஒரு கப்

மஞ்சள் தூள்- 1/4 தேக்கரண்டி

மிளகாய் தூள்- 2 தேக்கரண்டி

இஞ்சி பூண்டு விழுது- ஒரு தேக்கரண்டி

பூண்டு- 4 பற்கள்

எண்ணெய்- தேவையான அளவு

உப்பு- சுவைக்கு ஏற்ப

செய்முறை:

முதலில் கருணைக்கிழங்கை எடுத்து தோல் சீவி உங்களுக்கு தேவையான அளவில் வெட்டி கொள்ளுங்கள். வெட்டிய துண்டுகளை ஒரு கிண்ணம் மோரில் போடவும். ஒரு சில சமயத்தில் கருணைக்கிழங்கை சாப்பிடும் போது தொண்டையில் ஒரு வித எரிச்சல் ஏற்படும். அதனை தவிர்ப்பதற்காக கிழங்கை மூன்று நிமிடங்கள் உப்பு சேர்த்த மோரில் ஊற வைக்கவும்.

பிறகு சுத்தமான தண்ணீரில் போட்டு நன்றாக கழுவி எடுக்கவும். ஒரு கடாயை அடுப்பில் வைத்து கழுவிய கிழங்கை போடவும். கூடவே இரண்டு தேக்கரண்டி மிளகாய் தூள், 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள், ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது, தேவையான அளவு உப்பு மற்றும் கிழங்கு மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றவும். 

கிழங்கு முக்கால் பாகம் வெந்தால் போதும். இப்போது அடுப்பில் ஒரு வாணலியில் கிழங்கு வறுக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி வறுத்து எடுத்து கொள்ளுங்கள். பிறகு  கிழங்கை தனியாக எடுத்து வைத்து கொள்ளவும். அதிகப்படியான  எண்ணெயையும் எடுத்து விடலாம். இதில் கறிவேப்பிலை, நான்கு பற்கள் தட்டிய பூண்டு மற்றும் வறுத்த கருணைக்கிழங்கு சேர்த்து அடுப்பை அணைத்தால் ருசியான கருணைக்கிழங்கு வறுவல் தயார்.

Views: - 40

0

0