ஐந்தே நிமிடங்களில் காரசாரமான தக்காளி சட்னி!!!

23 January 2021, 8:13 pm
Quick Share

காலை உணவுக்கு சுட சுட இட்லியோடு காரசாரமான தக்காளி சட்னி மட்டும் வைத்து பாருங்கள்… எத்தனை இட்லி சாப்பிடுகிறோம் என்று நமக்கே தெரியாது. அதிலும் இந்த தக்காளி சட்னியை மிக எளிதாக செய்து விடலாம். எனவே பேச்லர்கள் கூட இதனை கண்டிப்பாக டிரை பண்ணி பார்க்கலாம்.     

தேவையான பொருட்கள்:- தக்காளி – 4 

கறிவேப்பிலை – 1 கொத்து  கடுகு விதைகள் – 1 தேக்கரண்டி 

உளுத்தம்பருப்பு – 1/2  தேக்கரண்டி 

வெந்தயம் – 1/2 தேக்கரண்டி 

பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை 

மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை 

சிவப்பு மிளகாய் தூள் – ½ தேக்கரண்டி 

எண்ணெய் – 1 தேக்கரண்டி உப்பு- சுவைக்க 

செய்முறை: 

* அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெயை சூடாக்கவும். பிறகு கடுகு சேர்க்கவும். 

*கடுகு பொரிந்தவுடன், உளுத்தம்பருப்பைச் சேர்க்கவும். அவை சுமார் 20 விநாடிகளில் பொன்னிறமாகிவிடும்.  அந்த நேரத்தில், வெந்தயம் மற்றும் பெருங்காயத்தூள்  சேர்த்து, விரைவில் கறிவேப்பிலை, தக்காளி, மஞ்சள் தூள், சிவப்பு மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்க்கவும். 

* எல்லாவற்றையும் நன்கு கலக்கவும். தக்காளியை வதங்க விடவும். நீங்கள் விருப்பப்பட்டால், ஓரிரு டீஸ்பூன் தண்ணீரைச் சேர்க்கவும். 

* தக்காளி வதங்கும் போது அதனை நசுக்கி விட்டு கொள்ளவும்.   

*எண்ணெய் பிரிந்து வரும்போது அடுப்பை அணைத்து விடலாம்.  சட்னியை தோசை, இட்லி, அரிசி அல்லது சப்பாத்தியுடன் பரிமாறவும்.

Views: - 1

0

0