வேக வைத்த ஆப்பிள் சிப்ஸ்…ஆப்பிள் வைத்து இப்படி ஒரு அசத்தலான ரெசிபியா…???

28 April 2021, 8:38 pm
Quick Share

‘ஒரு நாளைக்கு ஒரே ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்ல வேண்டிய வேலையே இருக்காது’ என்ற பழமொழியை நீங்கள் கேட்டிருக்க வேண்டும்.   ஆப்பிள்கள் இயற்கையின் மிகப் பெரிய பரிசுகளில் ஒன்றாகும். மேலும் பல்வேறு நோய்களைத் தடுக்கக்கூடிய பல ஆரோக்கிய நன்மைகள் இதில் உள்ளன. 

ஆப்பிள்களில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால் நீங்கள் நீண்ட நேரம் முழுமையாக உணரலாம். மேலும் பசியுடன் இருக்க மாட்டீர்கள். மேலும் மலச்சிக்கல் என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போகும். ஆப்பிள்களில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நம் உடல் சர்க்கரையை உறிஞ்சும் வீதத்தை குறைக்கும். இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயனளிக்கும்.

ஆப்பிள்கள் மிகவும் ஆரோக்கியமானவை மட்டுமல்ல, சுவையாகவும் இருக்கும். இருப்பினும்  அவற்றை பச்சையாக சாப்பிடுவதைக் காட்டிலும், அதனை ஆரோக்கியமான ஸ்நாக்ஸாக மாற்றுவது அதன் சுவையை இ்ன்னும் அதிகரிக்கும். இது குறிப்பாக உங்கள் எடையை நிர்வகிக்க முயற்சிக்கிறீர்கள் என்றால் ஆப்பிள்கள் உங்களுக்கான சிறந்த தேர்வாகும். வேக வைத்த ஆப்பிள் சிப்ஸ் எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க…

தேவையான பொருட்கள்: 

2 ஆப்பிள்கள் 

1 தேக்கரண்டி இலவங்கப்பட்டை தூள்

1 தேக்கரண்டி பொடித்த  சர்க்கரை

செய்முறை: 

* முதலில் ஆப்பிள்களை மெல்லிய துண்டுகளாக வெட்டுங்கள். 

* அடுத்து, வெட்டப்பட்ட ஆப்பிள் துண்டுகள் மீது  இலவங்கப்பட்டை தூள்  தூவவும். உங்கள் சுவைக்கு ஏற்ப மசாலாவின் அளவை நீங்கள் சரிசெய்யலாம். இந்த கட்டத்தில், இதற்கு  இனிமையை அதிகரிக்க பொடித்த சர்க்கரை சேர்க்கலாம். நீங்கள் உங்கள் எடையை நிர்வகிக்க விரும்பினால், அதைத் தவிர்க்க வேண்டும்.

* ஓவனை 110 ° C க்கு முன்கூட்டியே சூடாக்கவும்.

* ஆப்பிள் துண்டுகளை அடுப்பில் வைத்து சுமார் 25 முதல் 30 நிமிடங்கள் வேக வைக்கவும்.  

* அவ்வளவு தான்… டேஸ்டான ஆப்பிள் சிப்ஸ் தயார்.

Views: - 93

0

0