செம சூப்பரான காலை டிபன்… பாசிப்பருப்பு வெஜிடபிள் கிச்சடி!!!

5 March 2021, 8:01 am
Quick Share

காலையில் என்ன டிபன் செய்வது என யோசிப்பதே ஒரு பெரிய தலைவலி தான். ஆனால் காலை உணவை செய்யும் போது ஒரு விஷயத்தை கட்டாயமாக நினைவில் கொள்ளுங்கள். நம் நாளை ஆரம்பிக்கும் காலை உணவு எப்போதும் ஆரோக்கியமானதாகவும், ஆற்றல் மூலமாகவும் இருக்க வேண்டும். அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருப்பது பாசிப்பருப்பு வெஜிடபிள் கிச்சடி. இதனை எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க…

தேவையான பொருட்கள்:

3/4 கப் பாசிப் பருப்பு

1/4 கப் அரிசி

1 தக்காளி

1 கப் நறுக்கிய கேரட்

1 கப் நறுக்கிய முட்டைக்கோசு

1 கப் பட்டாணி

1/2 கப் குடை மிளகாய்

1 தேக்கரண்டி பூண்டு பேஸ்ட்

1 தேக்கரண்டி இஞ்சி பேஸ்ட்

1 பச்சை மிளகாய்

1 தேக்கரண்டி நெய்

1 கைப்பிடியளவு கொத்தமல்லி இலை

தேவையான அளவு உப்பு

தேவையான அளவு மிளகாய் பொடி

1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்

தேவையான அளவு பெருங்காயம்

1 தேக்கரண்டி சீரகம்

செய்முறை:

*பாசிப்பருப்பு வெஜிடபிள் கிச்சடி செய்வதற்கு முதலில் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து அதில் பாசிப்பருப்பை போட்டு பொன்னிறமாக வறுக்கவும்.

*இப்போது வறுத்த பாசிப்பருப்பு மற்றும் அரிசியை நன்கு கழுவி இரண்டையும் குக்கரில் சேர்த்து இது வேக தேவையான அளவு தண்ணீர் ஊற்றவும்.

*இதனோடு உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து குக்கரை மூடி ஏழு விசில் வர விடவும்.

*அடுத்து ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் நெய் ஊற்றவும்.

*நெய் உருகியதும் பெருங்காயம், சீரகம் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

*இஞ்சி பூண்டின் பச்சை வாசனை போனதும் அதில் நறுக்கிய கேரட், முட்டைகோஸ் மற்றும் பட்டாணி சேர்த்து வதக்கவும்.

*அடுத்ததாக இதில் நறுக்கிய குடை மிளகாய், தக்காளி சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கவும்.

*பிறகு மிளகாய் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நான்கு நிமிடங்கள் அனைத்தையும் வதங்க விடவும்.

*நாம் குக்கரில் வேக வைத்துள்ள பாசிப்பருப்பு மற்றும் அரிசி கலவையில் இந்த வதக்கிய காய்கறிகளை சேர்க்கவும்.

*கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி கலந்து விடுங்கள்.

*கடைசியில் ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றி சூடாக பரிமாறவும்.

Views: - 22

0

0