உங்கள் நண்பர்களுடன் என்ஜாய் பண்ண டேஸ்டான பாதாம் வெண்ணிலா கேக்!!!

6 April 2021, 3:43 pm
Quick Share

நண்பர்களுக்கு டீ பார்டி வைப்பது அவர்களுடன் ஜாலியாக நேரத்தை செலவழிக்க ஒரு சிறந்த வழியாகும். பார்டியில் கேக் இல்லையென்றால் எப்படி… அதற்காக கடைகளில் சென்று தான் கேக் வாங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. வீட்டிலே செம டேஸ்டான கேக்கை நாம் செய்யலாம். 

உங்களுக்காக ஒரு எளிய மற்றும் சுவையான ரெசிபி இங்கு உள்ளது. இப்போது பாதாம் வெண்ணிலா கேக் எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க…

தேவையான பொருட்கள்:

1 + ½ கப் – மைதா மாவு 

3 முட்டை அல்லது ¾ கப் – தயிர் அல்லது ½ கப் – பால்

150 கிராம் – சர்க்கரை

120 ml – காய்கறி எண்ணெய்

1 கிராம் – இலவங்கப்பட்டை தூள்

1.5 கரண்டி – பேக்கிங் பவுடர்

1 தேக்கரண்டி – வெண்ணிலா எசன்ஸ்

கேரமல் செய்ய:

3 கரண்டி – நீர்

6 கரண்டி – சூடான புதிய கிரீம்

100 கிராம் – கிரானுலேட்டட் சர்க்கரை

1 கரண்டி – வெண்ணெய்

6 கரண்டி – பாதாம் துண்டுகள்

கஸ்டார்ட் நிரப்புவதற்கு:

½ கப் – கஸ்டர்ட்

2 கப் – விப்ட் கிரீம்

செய்முறை:

* ஓவனை 180 டிகிரி செல்சியஸில் முன்கூட்டியே சூடாக்கவும். அதேசமயம், கேக் பானில் பேப்பர் போட்டு வைக்கவும். அடுத்து  உலர்ந்த பொருட்கள் அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் கலந்து தனியாக வைக்கவும்.

* மற்றொரு கிண்ணத்தில் ஈரமான பொருட்களை கலக்கவும். இதனோடு  ஒரு முட்டையைச் சேர்த்து நன்றாக கலக்கவும். பின்னர் பால் சேர்த்து கலக்கவும்.

* இப்போது உலர்ந்த பொருட்களின் கலவை மற்றும் ஈரமான பொருட்களின் கலவையை ஒன்றாக சேர்த்து, ஒரு ஸ்பேட்டூலாவைப் பயன்படுத்தி கலவையை மடியுங்கள். கேக் டின்னுக்கு இந்த கலவையை மாற்றவும். பிறகு 30-35 நிமிடங்கள் பேக் செய்யவும்.

* இதற்கிடையில், கேரமல் செய்ய வைக்கப்பட்டுள்ள பொருட்களை ஒரு அடி கனமான பாத்திரத்தில் சேர்த்து நடுத்தர வெப்பத்தில் அடுப்பில் வைக்கவும். இதில்  கிரானுலேட்டட் சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்க்கவும். பாத்திரத்தை லேசாக சாய்த்து அது சமமாக இருக்கும்படி செய்யவும்.

* நல்ல தங்க பழுப்பு நிறமாக மாறும் வரை இது அடுப்பில் இருக்கட்டும்.

* அடுப்பை அணைத்து சூடான கிரீம் சேர்க்கவும்.

* ஒரு மர கரண்டியை எடுத்து இதனை  கலக்கவும். இப்போது வெண்ணெய் சேர்த்து ஒரு நிமிடம் மட்டும்  சமைக்கவும்.

* கடைசியாக, பாதாம் துண்டுகளை சேர்த்து கலக்கவும். பின்னர் கேக் மீது நாம் தயார் செய்த கேரமலின் ஒரு அடுக்கை  பரப்பவும். பின்னர், 180 டிகிரி செல்சியஸில் மீண்டும் 10 நிமிடங்களுக்கு அடுப்பில் வைக்கவும்.

* கஸ்டர்டை நிரப்புவதற்கு, கஸ்டர்டை விப்பிங் கிரீம் போல மடியுங்கள். இப்போது கேக்கை இரண்டு அடுக்குகளாக வெட்டவும். அவ்வளவு தான்… டேஸ்டான கேக் தயார்.

Views: - 0

0

0