உங்கள் வீட்டு குட்டீஸ்களுக்கு பிடித்த மெது மெது கிரீமி பட்டர் பன்!!!
7 August 2020, 1:56 pmகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆசையோடு விரும்பி உண்ணும் கிரீமி பட்டர் பன் வீட்டிலே எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க… இதனை செய்வதற்கு குறைவான பொருட்களே தேவைப்படும். சுலபமாகவும் செய்து விடலாம்.
தேவையான பொருட்கள்:
மைதா மாவு- 250 கிராம்
வெண்ணெய்- 7 தேக்கரண்டி
பால்- 3/4 கப்
சர்க்கரை- 3/4 கப்
ஈஸ்ட்- 1 தேக்கரண்டி
உப்பு- 1/4 தேக்கரண்டி
எண்ணெய்- 2 தேக்கரண்டி
செய்முறை:
பன் செய்வதற்கு முதலில் நாம் ஈஸ்டை ஆக்டிவேட் செய்ய வேண்டும். அதற்கு ஒரு பவுலில் 3/4 கப் பால் பாலோடு ஒரு தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து கலக்கவும். ஈஸ்டானது இந்த சர்க்கரையை சாப்பிட்டு தான் வளரும். இந்த பாலில் ஒரு தேக்கரண்டி ஈஸ்ட் சேர்த்து ஐந்து நிமிடங்கள் அப்படியே வையுங்கள்.
ஐந்து நிமிடங்கள் கழித்து நுறையாக பொங்கி ஈஸ்ட் ஆக்டிவேட் ஆகி இருக்கும். இப்போது ஒரு பெரிய பவுலில் இரண்டு கப் மைதா மாவு எடுத்துக் கொள்ளவும். மைதா மாவோடு 1/4 தேக்கரண்டி உப்பு, இரண்டு மணி நேரத்திற்கு முன்னரே ஃபிரிட்ஜில் இருந்து எடுத்து வைக்கப்பட்ட அன்சால்டட் வெண்ணெய், ஆக்வேட் ஆன ஈஸ்ட் பால் சேர்த்து போது பிசைந்து கொள்ளவும்.
முதலில் இந்த மாவு கையில் ஒட்டி வரும். இதனை பத்தில் இருந்து பதினைந்து நிமிடங்கள் வரை நன்றாக இழுத்து பிசையவும். மாவு ஒட்டாமல் வந்து விட்டால் ஒரு பெரிய பவுலில் எண்ணெய் தடவி மாவை அதனுள் வைத்து மாவின் மேலேயும் எண்ணெய் தடவி ஒரு ஈர துணி போட்டு மூடி வைத்து விடவும்.
இந்த மாவு ஒன்றரை மணி நேரத்தில் இருந்து இரண்டு மணி நேரம் இரண்டு மடங்காக ஆகும் வரை ஊறட்டும். மாவு இரண்டு மணி நேரம் ஊறிய பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக மாவு எடுத்து ஏழில் இருந்து எட்டு உருண்டைகளாக எந்த வித கிராக்கும் இல்லாமல் உருட்டி கொள்ளுங்கள். உருட்டிய மாவை முப்பது நிமிடங்கள் அப்படியே இருக்கட்டும்.
முப்பது நிமிடங்கள் கழித்து உருண்டைகள் இன்னும் கொஞ்சம் பெரிசாகி இருக்கும். இப்போது ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி குறைவான சூட்டில் உருண்டைகளை போட்டு எடுக்கவும். கோல்டன் கலராக மாறியதும் எடுத்து விடலாம். பன் இப்போது தயாராக உள்ளது. இதனை அப்படியே கூட சாப்பிடலாம்.
இந்த பன் ஆறியதும் தான் நாம் கிரீமை தடவ வேண்டும். கிரீம் செய்வதற்கு ஒரு பவுலில் நான்கு தேக்கரண்டி அன்சால்டட் பட்டர் எடுத்துக் கொள்ளவும். இதனோடு 1/2 கப் பொடி செய்த சர்க்கரை, ஒரு தேக்கரண்டி காய்ச்சி ஆற வைத்த பால் ஊற்றி நன்றாக கலந்து கொண்டால் கிரீம் ரெடி. நாம் ரெடி பண்ண பன்னை நடுவில் வெட்டி கிரீமை தடவவும். சுவையான கிரீம் பன் தயாராகி விட்டது. வாங்க…