காலை டிபனுக்கு ஆரோக்கியமான, சுவை மிகுந்த தினை தேங்காய் சாதம்!!!

19 January 2021, 8:14 am
Quick Share

உடலுக்கு ஏகப்பட்ட பலத்தை வழங்கி, நம்மை சுறுசுறுப்பாக வைக்கும் உணவு வகைகளில் தினையும் ஒன்று. ஆனால் நமது முன்னோர்கள் தினையை பயன்படுத்திய அளவிற்கு நாம் இதனை பொறுட்படுத்துவதில்லை என்று தான் கூற வேண்டும். தினை டேஸ்டாக இருக்காது என்ற கருத்தே இதற்கு காரணம். உண்மையில் செய்யும் விதத்தில் செய்தால் நிச்சயமாக அனைவரும் கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருப்பது சுவையான தினை தேங்காய் சாதம். 

தேவையான பொருட்கள்: 

½ கப் தினை (உங்களுக்கு பிடித்தமான தானியத்தை நீங்கள் பயன்படுத்தலாம்) 1 கப் தண்ணீர் 

½ கப் அரைத்த தேங்காய் ருசிக்க கல் உப்பு 

1 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் 

1 பச்சை ஏலக்காய் 

1 சிறிய இலவங்கப்பட்டை 1-2 பிரியாணி இலைகள் 

1 தேக்கரண்டி கடலைப்பருப்பு 

1 தேக்கரண்டி கடுகு

2 கொத்து கறிவேப்பிலை

2 உலர்ந்த சிவப்பு மிளகாய் 

செய்முறை: 

முதலில் உங்களுக்கு விருப்பமான தினையை  நன்கு சுத்தம் செய்து கழுவி 6-8 மணி நேரம் ஊற வைக்கவும். ஒரு அகலமான வாணலியில், 1.25 கப் தண்ணீர் ஊற்றவும். இது ஒரு கொதி நிலைக்கு வரட்டும். இதில் தேவையான அளவு உப்பு மற்றும் தேங்காய் எண்ணெயில் சில துளிகளை சேர்க்கவும். அடுத்து ஊறவைத்த தினை சேர்த்து அது வேகும் வரை சமைக்கவும். குழைந்து விடாமல் பார்த்து கொள்ளவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கவும். கடுகு சேர்த்து அது பொரிந்தவுடன் கடலைப்பருப்பு மற்றும்  மசாலா பொருட்களை  சேர்க்கவும். புதிதாக அரைத்த தேங்காய் சேர்த்து லேசான பொன்னிறமாகும் வரை வதக்கவும். இதனோடு சமைத்த தினை சேர்த்து நன்கு கிளறவும். கடைசியில் நறுக்கிய  கொத்தமல்லி இலைகளால் அலங்கரிக்கவும். உங்களுக்கு பிடித்த சட்னியோடு சூடாக பரிமாறவும்.

Views: - 0

0

0