மாங்காயை வைத்து இப்படி ஒரு அசத்தலான சம்மர் ரெசிபியா… இன்றே செய்து பாருங்கள்!!!

26 April 2021, 2:21 pm
Quick Share

வெப்பநிலை உயரும்போது, ​​நமது நீரிழப்பு அளவும் உயரும். எனவே, இதனை ஈடுகட்ட நம்மை நீரேற்றமாக வைத்திருப்பது அவசியம். நம் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும் கோடைகால பானங்களை பருகுவதன் மூலம் இதனை எளிதாக சமாளித்து விடலாம். அந்த பட்டியலில் பச்சை மாங்காய் பானம் உடனடியாக நம்மை மறுசீரமைக்கிறது. மேலும் நம் சுவை மொட்டுகளையும் நிறைவு செய்கிறது. இது சிட்ரிக் மற்றும் ஆக்சாலிக் அமிலங்கள் நிறைந்தவை. அவை நம் உடலில் இருந்து முக்கிய உப்புக்கள் மற்றும் தாதுக்களை இழப்பதைத் தடுக்கின்றன. இது உடலில் எலக்ட்ரோலைட் சமநிலையை பராமரிக்க உதவுகிறது. கூடுதலாக, இதில் வைட்டமின் A  மற்றும் C, இரும்பு மற்றும் ஃபோலேட்டுகள் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த பானம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்றும் கருதப்படுகிறது. அதே இதில் உள்ள பெக்டின் உள்ளடக்கம் செரிமான அமைப்பை சீராக்கவும் வயிற்றுப்போக்கு மற்றும் மலச்சிக்கல் போன்ற வியாதிகளுக்கு எதிராக போராடவும் பயனுள்ளதாக இருக்கும்.

தேவையான பொருட்கள்: 

1 மாங்காய்

2-3 கப் தண்ணீர்

3 தேக்கரண்டி புதினா 

1/4 கப் சர்க்கரை

½ தேக்கரண்டி ஏலக்காய் தூள்

½ தேக்கரண்டி சீரகம் தூள்

½ தேக்கரண்டி மிளகு தூள்

 ¾ தேக்கரண்டி உப்பு

4-5 ஐஸ் கட்டிகள்

3-4 கப் குளிர்ந்த நீர்

செய்முறை:

* முதலில் ஒரு குக்கரை எடுத்து அதில் மாங்காய் மற்றும் இரண்டு கப் தண்ணீரை ஊற்றி ஐந்து விசில்களுக்கு சமைக்கவும்.

* பிரஷர் அடங்கியதும் அது நன்கு ஆறட்டும். பின்னர் மாங்காயின் தோலை உரித்து கூழாக அதனை மசிக்கவும். 

* இதனை ஒரு மிக்ஸி ஜாருக்கு மாற்றி அதனோடு மூன்று தேக்கரண்டி புதினா, 1/4  கப் சர்க்கரை ஆகியவற்றை சேர்த்து அரைக்கவும்.

* அடுத்து, ஏலக்காய் தூள், சீரகம் தூள், மிளகு தூள்,  உப்பு சேர்க்கவும்.

* இதனை ஒரு பெரிய டம்ளருக்கு ஊற்றி ஐஸ் க்யூப்ஸ் மற்றும் குளிர்ந்த நீரைச் சேர்க்கவும். அவ்வளவு தான்… சுவையான மாங்காய் பானம் தயார்.

Views: - 148

0

0

Leave a Reply