தக்காளி செலரி ஜூஸ் ரெசிபி: என்றென்றும் இளமை ததும்ப தினமும் இத குடிங்க….!!!

15 April 2021, 10:15 pm
Quick Share

உங்களுக்கு  காய்கறி என்றாலே பிடிக்காதா… சாலட் சாப்பிடுவதை வெறுப்பீர்களா… நீங்க இத கட்டாயம் படிக்கணும்.  இந்த ஆரோக்கியமான மற்றும் சுவையான தக்காளி மற்றும் செலரி ஜூஸ் நிச்சயமாக உங்களுக்கு பிடிக்கும். 

பழச்சாறுகளில் ஒன்று தக்காளி-செலரி ஜூஸ் ஆகும். இது வைட்டமின் C  மற்றும் லைகோபீனின் சிறந்த மூலமாகும். இது பல நோய்களை எதிர்த்துப் போராட உதவும் ஒரு சிறந்த ஆக்ஸிஜனேற்றியாகும். இது ஒரு அருமையான நோய் எதிர்ப்பு சக்தி பூஸ்டர், மற்றும் தோலின்  வயதான எதிர்ப்பு அறிகுறிகளை தடுப்பதில்  சிறந்தது. எனவே என்றும் இளமையாக இருக்க விரும்பினால் இந்த பழச்சாற்றை அடிக்கடி உங்கள் உணவில் சேர்த்து கொள்ளவும்.

தேவையான பொருட்கள்:

*2 தக்காளி

*எலுமிச்சை

*ஒரு அங்குலம் செலரி

*ஒரு சில துளசி இலைகள்

*இளஞ்சிவப்பு உப்பு

*சுவைக்கு ஏற்ப கருப்பு மிளகு 

செய்முறை:

ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து, அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து, பேஸ்டாக அரைக்கவும்.

இப்போது இதை ஒரு டம்ளரில் ஊற்றி, சில துளசி இலைகளால் அலங்கரித்து அப்படியே  குடிக்கவும்.

இந்த தக்காளி மற்றும் செலரி ஜூஸை குடிப்பதால் ஏற்படும் சில ஆச்சரியமான நன்மைகள்:

* தக்காளி மற்றும் செலரி இரண்டும் வைட்டமின் C  மற்றும் ஆக்ஸிஜனேற்றிகளின் சிறந்த ஆதாரங்களாக இருக்கின்றன. 

* இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. 

* உங்கள் குடலை சுத்தமாக்குகிறது.

* ஒளிரும் சருமத்தை தருகிறது.

* தலைமுடி உதிர்தலைக் குறைக்கிறது.

* மேலும் வயதான அறிகுறிகளையும் குறைக்கிறது.

* அஜீரணம் மற்றும் இரைப்பை சிக்கல்களைக் அனுபவிப்பவர்களுக்கு இளஞ்சிவப்பு உப்பு சிறந்தது.

* இந்த சாறு நார்ச்சத்தை அதிக அளவில் கொண்டுள்ளது. எனவே ஒருவருக்கு குடல் பிரச்சினைகள் இருந்தால், இதை விட சிறந்த தீர்வு எதுவும் இல்லை.

Views: - 20

0

0