உடலுக்கு பலம் சேர்க்கும் செம டேஸ்டான சாமை மிளகு பொங்கல்!!!

19 January 2021, 9:13 pm
Quick Share

சிறுதானியங்களை நாம் பெரிதாக நம் உணவில் சேர்த்து கொள்வதில்லை. சிறுதானியங்களில் 25% புரதம் மற்றும் நார்ச்சத்து உள்ளது. அது மட்டும் இல்லாமல் இதில் வைட்டமின் E, வைட்டமின் B காம்ப்ளக்ஸ், ரிபோபிளேவினும் உள்ளது. சிறுதானியங்களை வைத்து செய்யப்படும் உணவுகள் சுவையாகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்கும். இன்று சாமை மிளகு பொங்கல் எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க…

தேவையான பொருட்கள்:

சாமை- 1/2 கிலோ

பாசிப்பருப்பு- 200 கிராம்

இஞ்சி- ஒரு துண்டு

சீரகம்- 2 தேக்கரண்டி

மிளகு- சிறிதளவு

பெருங்காயத் தூள்- இரண்டு சிட்டிகை

நெய்- 4 தேக்கரண்டி

உப்பு- தேவைக்கு ஏற்ப

செய்முறை:

சாமை மிளகு பொங்கல் செய்வதற்கு சாமை மற்றும் பாசிப்பருப்பு ஆகிய இரண்டையும் நன்றாக கழுவி சுத்தம் செய்து குக்கரில் சேர்க்கவும். இது வேக போதுமான அளவு தண்ணீர் மற்றும் தேவைக்கு ஏற்ப உப்பு சேர்த்து ஐந்து விசில் வரும்வரை வேக வைக்கவும். இப்போது ஒரு வாணலியில் நெய் ஊற்றுங்கள். நெய் உருகியதும் பெருங்காயத் தூள், மிளகு, சீரகம், பொடியாக நறுக்கிய இஞ்சி சேர்த்து வதக்கவும். இதனுடன் வேக வைத்த சாமையை சேர்த்து கிளறவும். மீண்டும் நெய் ஊற்றி நன்கு கலந்து கொள்ளவும். அவ்வளவு தான்… டேஸ்டான சாமை மிளகு பொங்கல் தயார்.

Views: - 1

0

0