சம்மருக்கு ஏத்தா மாதிரி புதினா சட்னி இப்படி செய்து பாருங்க… சும்மா வேற லெவல்ல இருக்கும்!!!

Author: Hemalatha Ramkumar
17 April 2022, 6:21 pm
Quick Share

காலை உணவை மேலும் ஸ்பெஷலாக்க இந்த கொத்தமல்லி புதினா காரசட்னி செய்து பாருங்கள். தோசை, இட்லிக்கு பக்கா சைடீஸ்ஸாக இருக்கும். இதில் புதினா மற்றும் கொத்தமல்லி சேர்ப்பதால், உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானதும் கூட. சுவையான புதினா, கொத்தமல்லி காரசட்னி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:
கொத்தமல்லி – 2 கைப்பிடி
புதினா – 1 கைப்பிடி
வரமிளகாய் – 3
கடலைப்பருப்பு – 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு – 1 டீஸ்பூன்
வெங்காயம் – 2(நறுக்கியது)
தக்காளி – 1(பெரியது நறுக்கியது)
பூண்டு – 5 பல்
தேங்காய் – 2 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

தாளிக்க:
எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு

செய்முறை:
*அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் சூடானதும், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, வரமிளகாய் சேர்க்கவும்.

*பின்பு, வெங்காயம், தக்காளி, பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும் .

*சற்று வதங்கியதும் தேங்காய் சேர்த்து வதக்கவும்.பின்பு, கழுவி
சுத்தம் செய்த கொத்தமல்லி புதினா இலைகளை சேர்த்து நன்கு வதக்கவும்.

*வதக்கிய அனைத்து பொருட்களையும். ஆற வைத்து மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

*இப்போது கடாயில் எண்ணெய் சூடாக்கி கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து, சட்னியோடு சேர்க்கவும்.

*சூடான இட்லி, தோசையோடு அரைத்த கொத்தமல்லி புதினா காரசட்னியை பரிமாறவும்.

Views: - 643

0

0