ராஜ்மா குருமா: ஆஹா… பார்த்தாலே நாவில் எச்சில் ஊறுதே!!!

Author: Hemalatha Ramkumar
16 April 2022, 5:25 pm
Quick Share

இன்று நாம் பார்க்க இருக்கும் ரெசிபி ராஜ்மா சப்ஜி. இந்த ராஜ்மாவை வட இந்திய மாநிலத்தில் அதிகமாக பயன்படுத்தப்படுத்தி வருகின்றனர். இப்போது தென்னிந்திய மாநிலத்திலும் அதிகளவு சமையலில் உபயோகிக்கின்றனர். இந்த ராஜ்மாவிற்கு சிவப்பு காராமணி என்று மற்றொரு பெயரும் உண்டு. இந்த ராஜ்மா சப்ஜியை நாண், புலாவ், சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும். இன்று இந்த சப்ஜியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:
ராஜ்மா-200(கிராம்)
வெங்காயம் -3
தக்காளி -2
பச்சைமிளகாய்-2
இஞ்சி -ஒரு துண்டு
பூண்டு-6பல்
மிளகாய்த்தூள்-2 தேக்கரண்டி
மல்லித்தூள்-2 தேக்கரண்டி
மஞ்சள்தூள்-1/4 டீஸ்பூன்
கரம் மசாலா-11/2 டீஸ்பூன்
சீரகத்தூள்-1 தேக்கரண்டி
பிரியாணி இலை-1
பட்டை-1 இன்ச்
லவங்கம்-2
ஏலக்காய்-1
உப்பு- தேவையான அளவு
எண்ணெய்- தேவையான அளவு
கொத்தமல்லி- ஒரு கைப்பிடி
வெண்ணெய்- ஒரு சிறுதுண்டு

செய்முறை:
*முதலில் ராஜ்மா சப்ஜி செய்வதற்கு ராஜ்மாவை 7முதல் 8 மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் குக்கரில் போட்டு வேகவைத்து அந்த நீரை வடிகட்டி எடுத்து வைத்துக்கொள்ளவும். பிறகு, வெங்காயத்தை பெரிதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

*இப்போது வெட்டி வைத்துள்ள வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சைமிளகாய் எல்லாவற்றையும் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

*மிக்ஸியில் அரைத்து வைத்துள்ள விழுதினை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.

*அடுத்ததாக தக்காளியை மிக்ஸியில் அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

*அடுத்ததாக வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்த பிறகு பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளிக்கவும்.

*இதனுடன் அரைத்து வைத்துள்ள வெங்காய விழுதினை நன்றாக வதக்கவும்.

*நன்றாக வதங்கியதும் தக்காளி விழுதை சேர்த்து நன்கு வதக்கவும்.

*நன்கு வதக்கிய பிறகு மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், கரம் மசாலாத்தூள், சீரகத்தூள், உப்பு தேவையான அளவு சேர்த்து வதக்கவும்.

*நன்றாக கெட்டியான நிலையில் இருக்கும் போது வேக வைத்துள்ள ராஜ்மாவினை சேர்த்து கிளறி, சிறுதுண்டு வெண்ணெய், கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.

Views: - 746

0

0