தயிர் இட்லி: எப்போதும் ஒரே மாதிரி இல்லாமல் இந்த மாதிரி டிரை பண்ணி பாருங்க!!!

Author: Hemalatha Ramkumar
24 May 2022, 11:31 am
Quick Share

இட்லியில் பல வகையான ரெசிபிகள் இருந்தாலும். நாம் இன்று பார்க்க இருக்கும் ரெசிபி தயிர் இட்லி. இந்த தயிர் இட்லி ரெசிபியை ஸ்நாக்ஸாகவும் சாப்பிடலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் இந்த தயிர் இட்லி எப்படி செய்வது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
இட்லிமாவு – 3 கப்

புளிக்காத தயிர் – 1 கப்

காரா பூந்தி – 3 டேபிள்ஸ்பூன்

தேங்காய் துருவல் – 3 டேபிள்ஸ்பூன்

கேரட் துருவல் – 1 டேபிள்ஸ்பூன்

இஞ்சி – சிறிதளவு

பச்சைமிளகாய் – 2

கொத்தமல்லி தழை – சிறிதளவு ( பொடியாக நறுக்கியது)

உப்பு – தேவையான அளவு

அரைக்க வேண்டியவை:
தேங்காய் துருவல், இஞ்சி, பச்சைமிளகாய் எல்லாவற்றையும் அரைத்துக்கொள்ளவும்.

செய்முறை:

*முதலில் இட்லித் தட்டில் மாவை ஊற்றி இட்லி வேகவைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

*பின்பு அரைத்து வைத்துள்ள கலவையை தயிரில் கலந்து உப்பு சேர்த்து இட்லி மேல் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றவும்.

* இந்த தயிர் இட்லியின் மேல் கொத்தமல்லி தழை, கேரட் துருவல், காரா பூந்தி போட்டு அலங்கரித்துப் பரிமாறலாம்.

* இப்போது சுவையான தயிர் இட்லி தயார்.

Views: - 577

0

0