இந்த மாதிரி மசாலா தோசை செய்து கொடுத்தால் கூட இரண்டு தோசை சேர்த்து சாப்பிடுவாங்க!!!

Author: Hemalatha Ramkumar
30 March 2022, 2:52 pm
Quick Share

தோசை ஒரு பிரபலமான தென்னிந்திய உணவாகும் ஒரு சிலருக்கு தோசை மொறு மொறுவென்று இருக்க வேண்டும். ஒரு சிலர் மென்மையாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவர். சூடான தோசையுடன் சாம்பார் மற்றும் தேங்காய்ச் சட்னி சேர்த்து சாப்பிடுவது அட்டகாசமாக இருக்கும். பொதுவாக அரிசி மற்றும் பருப்புகளை உள்ளடக்கிய புளித்த மாவிலிருந்து தோசை தயாரிக்கப்படுகிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

தோசையில் பல வெரைட்டி உண்டு. பொடி தோசை, கல் தோசை, வெங்காய தோசை, மசால் தோசை என அடுக்கிக் கொண்டு போகலாம். அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருப்பது உருளைக்கிழங்கு மசாலா தோசை. அதன் செய்முறையை இப்போது பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:
½ கிலோ உருளைக்கிழங்கு (வேகவைத்து பிசைந்தது)
1 பெரிய வெங்காயம் (நறுக்கியது)
3-4 பச்சை மிளகாய் (நறுக்கியது)
½” இஞ்சி (துருவியது)
¼ தேக்கரண்டி மஞ்சள் தூள்
பெருங்காயத் தூள் ஒரு சிட்டிகை (விரும்பினால்)
ருசிக்க உப்பு

தாளிப்பதற்காக:
2 தேக்கரண்டி எண்ணெய்
1 தேக்கரண்டி கடலைப்பருப்பு
5-6 முந்திரி பருப்புகள்
1 கொத்து கறிவேப்பிலை

செய்முறை:
*ஒரு கடாயில் 2 தேக்கரண்டி எண்ணெயை சூடாக்கவும்.

* சூடான எண்ணெயில், கடலைப்பருப்பு, முந்திரி, கறிவேப்பிலை சேர்த்து ஒரு நிமிடம் வறுக்கவும்.

*அடுத்து வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, மஞ்சள் தூள், பெருங்காயம் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.

*கடாயில் தண்ணீர் மற்றும் வேக வைத்து பிசைந்த உருளைக்கிழங்கைச் சேர்ப்பதற்கு முன் சில நிமிடங்கள் லேசாக வறுக்கவும். நன்றாக கலந்து சில நிமிடங்கள் சமைக்கவும்.

*இப்போது தோசையை ஊற்றி அதன் மீது நாம் தயார் செய்து வைத்த மசாலாவை பரப்பவும். அலங்கரிக்க, நறுக்கிய கொத்தமல்லி இலைகளைச் சேர்த்து, சூடான மற்றும் மிருதுவான மசாலா தோசையை பரிமாறவும்.

Views: - 1070

0

0