இவ்வளவு எளிமையான வெஜிடபிள் குருமாவிற்கு இத்தனை சுவையா???

25 August 2020, 6:39 pm
Quick Share

இட்லி, தோசை, சப்பாத்தி, பூரிக்கு நாம் வழக்கமாக செய்யும் சட்னி மற்றும் சாம்பாரை சாப்பிட்டு நீங்கள் சலித்துவிட்டால், இந்த சுவையான மற்றும் எளிதான சைவ செய்முறையுடன் சத்தான இடைவெளி எடுக்க வேண்டிய நேரம் இது. இந்த எளிமையான குருமா அனைத்து விதமான டிபன் வகைகளோடும் சுவையாக இருக்கும். இதன் சிறப்பு அம்சமாவது இது வீட்டில் கிடைக்கும் பொருட்களை வைத்து தயாரிக்கப்படும் சூப்பர் சுவையான வெஜிடபிள் குருமா ஆகும். 

தேவையான பொருட்கள்

3 தேக்கரண்டி- எண்ணெய்

2 – ஏலக்காய்

2 – இலவங்கப்பட்டை 

2 – கிராம்பு

ஒரு தேக்கரண்டி- கருப்பு மிளகு

1 தேக்கரண்டி- பெருஞ்சீரகம் 

1 – நறுக்கிய வெங்காயம்

3-4 பல்- நறுக்கிய பூண்டு

1 அங்குலம் – நறுக்கிய இஞ்சி

1/4 தேக்கரண்டி – மஞ்சள் தூள்

1 தேக்கரண்டி – கொத்தமல்லி தூள்

6-7 – முந்திரி (நறுக்கியது)

1 தேக்கரண்டி – கசகசா 

2- நறுக்கிய தக்காளி

2 – பச்சை மிளகாய்

இரண்டு கீற்று- தேங்காய் 

ஒரு கொத்து- கறிவேப்பிலை 

5- நறுக்கிய பீன்ஸ்

1- நறுக்கிய கேரட்

சுவைக்கு ஏற்ப உப்பு

1- நறுக்கிய சிறிய கத்திரிக்காய்

1/4- நறுக்கிய முட்டைக்கோஸ்

1- நறுக்கிய குடை மிளகாய்

செய்முறை:

* கடாயை சூடாக்கி 1-2 தேக்கரண்டி எண்ணெய் சேர்க்கவும்.

* ஏலக்காய், இலவங்கப்பட்டை குச்சிகள், கிராம்பு, சிறிது கருப்பு மிளகு, பெருஞ்சீரகம் ஆகியவற்றைச் சேர்க்கவும்.

* நறுக்கிய வெங்காயம் மற்றும் உப்பு சேர்க்கவும். 3-4  நறுக்கிய பூண்டு சேர்க்கவும்.

* அடுத்து நறுக்கிய இஞ்சியைச் சேர்த்து வதக்கவும்.

* மஞ்சள் தூள், கொத்தமல்லி தூள், 6-7 முந்திரி (நறுக்கியது), கசகசா, நறுக்கிய தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சேர்க்கவும்.

* இப்போது அடுப்பை அணைக்கவும்.

* பின்னர் இறுதியாக நறுக்கிய தேங்காயை சேர்த்து நன்கு கலக்கவும்.

* அடுப்பை அணைத்து விட்டு கலவையை சிறிது நேரம் ஓய்வெடுக்கட்டும்.

* கலவையை மிக்சி ஜாடியில் போட்டு அரைக்கவும்.

* கடாயை மீண்டும் சூடாக்கி அதில் ஒரு தேக்கரண்டி எண்ணெயை ஊற்றவும். ஒரு கொத்து கறிவேப்பிலை, நறுக்கிய பீன்ஸ், கேரட் மற்றும் சுவைக்கு ஏற்ப உப்பு சேர்த்து கலக்கவும்.

* அடுத்ததாக நறுக்கிய சிறிய கத்திரிக்காய், முட்டைக்கோஸ் சேர்க்கவும்.

* மூடியை மூடி 6-7 நிமிடங்கள் சமைக்கவும். பின்னர் நறுக்கிய குடை மிளகாயை  சேர்க்கவும்.

* தயாரிக்கப்பட்ட மசாலாவை சேர்த்து நன்கு கலக்கவும்.

* ½ கப் தண்ணீர் சேர்த்து கிளவும்.

* மூடியை ஐந்து நிமிடங்கள் மூடி வைக்கவும்.

* அவ்வளவு தான். ருசியான வெஜிடபிள் குருமா ரெடி. 

Views: - 49

0

0