அட்டகாசமான வெண்டைக்காய் முந்திரி பருப்பு ரெசிபி…!!!
6 March 2021, 3:04 pmவெண்டைக்காய் ஒரு சத்தான காய்கறி என்று நம் அனைவருக்குமே தெரியும். குறிப்பாக இது சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்ததாக கருதப்படுகிறது. உடலுக்கு தேவையான பல ஊட்டச்சத்துக்கள் வெண்டைக்காயில் நிறைந்துள்ளது. இதனை சாம்பார், புளிக்குழம்பு, மோர் குழம்பு போன்றவற்றில் சேர்க்கலாம். பொரியலாகவும் செய்து சாப்பிடலாம். இன்று வெண்டைக்காய், முந்திரி பருப்பு பொரியல் எப்படி செய்வது என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
வெண்டைக்காய் – 1/2 கிலோ
பூண்டு – 4
முந்திரி – 8
துருவிய தேங்காய் – 1 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை – ஒரு கொத்து
மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
கடுகு – 1/2 தேக்கரண்டி
சீரகம் – 1/2 தேக்கரண்டி
கடலைப் பருப்பு – 1/2 தேக்கரண்டி
வரமிளகாய் – 1
எண்ணெய் – 1 1/2 தேக்கரண்டி
செய்முறை:
*வெண்டைக்காய் பொரியல் செய்வதற்கு முதலில் வெண்டைக்காய்களை நன்கு ஒரு துணியால் துடைத்து பின்பு உங்களுக்கு தேவையான அளவில் நறுக்கி கொள்ளவும்.
*ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றவும்.
*எண்ணெய் சூடானதும் அதில் கடுகு, சீரகம், கடலைப்பருப்பு, வர மிளகாய் மற்றும் பூண்டு போட்டு தாளிக்கவும்.
*இப்போது அதில் முந்திரி பருப்பை போட்டு பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.
*அடுத்து மஞ்சள் தூள், உப்பு, கறிவேப்பிலை மற்றும் மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.
*மசாலாக்களின் பச்சை வாசனை போகும் வரை வதக்கி விடவும்.
*இதனோடு வெண்டைக்காயை சேர்த்து வதக்குங்கள்.
*வெண்டைக்காய் நன்கு சருங்கி வெந்ததும் அதில் துருவிய தேங்காயை சேர்த்து அடுப்பை அணைத்து விடுங்கள்.
*ருசியான வெண்டைக்காய் முந்திரி பருப்பு பொரியல் தயார்.
0
0