விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: ருசியான மணிக்கொழுக்கட்டை!!!

20 August 2020, 6:30 pm
Quick Share

இன்னும் ஓரிரு நாட்களில் விநாயகர் சதுர்த்தி வர இருப்பதால் அந்த பண்டிகைக்கு நாம் தயாராக வேண்டும் அல்லவா…??? ஆம்… விநாயகருக்கு மிகவும் பிடித்த மணி கொழுக்கட்டை செய்து படைக்க அதனை எவ்வாறு செய்வது என தெரிந்து கொள்ள வேண்டாமா… இப்போது மணி கொழுக்கட்டை எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க…

தேவையான பொருட்கள்:

அரிசி- 1/2 கப்

எண்ணெய்- ஒரு தேக்கரண்டி

கடுகு- ஒரு தேக்கரண்டி

காய்ந்த மிளகாய்- 2

பச்சை மிளகாய்- 1

பெருங்காய தூள்- ஒரு சிட்டிகை

கறிவேப்பிலை- ஒரு கொத்து

துருவிய தேங்காய்- 1/4 கப்

உப்பு- தேவையான அளவு

செய்முறை:

கொழுக்கட்டை செய்ய முதலில் 1/2 கப் அரிசியை நான்கில் இருந்து ஐந்து மணி நேரம் ஊற வைத்து கொள்ளுங்கள். பிறகு தண்ணீரை வடிகட்டி அரிசியை ஓரளவு உலர்த்தி மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்து கொள்ளலாம். இப்போது கொழுக்கட்டைக்கு அரிசி மாவு தயாராகி விட்டது. 

அடுப்பில் ஒரு கடாயை வைத்து தண்ணீர் ஊற்றுங்கள். அதில் எண்ணெய் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க வையுங்கள். தண்ணீர் கொதித்த பின் அரிசி மாவை அதில் கொஞ்சம் கொஞ்சமாக போட்டு கிளறுங்கள். தண்ணீர் முழுவதுமாக வற்றி போகும் வரை கிளறவும். 

இப்போது அடுப்பை அணைத்து மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி இட்லி தட்டில் வைத்து ஆவியில் வேக வைத்து எடுத்து கொள்ளவும். கொழுக்கட்டையை தாளிக்க கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, பெருங்காயம், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், 1/4 கப் துருவிய தேங்காய் மற்றும் கறிவேப்பிலை போட்டு தாளித்து கொழுக்கட்டையோடு சேர்த்து கலந்து விடுங்கள். அவ்வளவு தான்… ருசியான மணிக்கொழுக்கட்டை தயார்.

Views: - 29

0

0